Published:Updated:

முதலீடு மற்றும் காப்பீடு... எல்.ஐ.சி-யின் புதிய திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

முதலீடு மற்றும் காப்பீடு... எல்.ஐ.சி-யின் புதிய திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசிரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்

எல்.ஐ.சி: புதிய பீம ரத்தனா காப்பீட்டுத் திட்டம்...

எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முதலீடு மற்றும் காப்பீட்டை உள்ளடக்கிய புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் ஒரு பாரம்பர்ய வகை காப்பீட்டு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் பாலிசிதாரர் திட்டக் காலத்தில் மரணமடைய நேர்ந்தால், 125% காப்பீட்டுத் தொகை அல்லது ஆண்டு பிரீமியம் செலுத்தும் தொகையில் ஏழு மடங்கு ஆகிய இரண்டில் எது அதிகமோ, அது காப்பீட்டுத் தொகையாக பாலிசிதாரர் குடும்பத்துக்குக் கிடைக்கும்.

மேலும், எல்.ஐ.சி நிறுவனம் சார்பாக நிச்சய போனஸாக பாலிசி தொடங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர்ர் ஆயிரம் ரூபாய்க்கும் 50 ரூபாயும், ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு 55 ரூபாயும், 10 ஆண்டுகளுக்கு மேல் 60 ரூபாயும் கிடைக்கும். திட்டக் காலமாக 10, 15, 20, 25 ஆண்டுகள் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. திட்டக் காலத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையை அடிப்படையாக வைத்துக் கடன் பெறும் வசதியும் உள்ளது. பாரம்பர்ய வகை காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்புகிறவர்கள் எல்.ஐ.சி அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

முதலீடு மற்றும் காப்பீடு... எல்.ஐ.சி-யின் புதிய திட்டம்!

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்: ஹெல்த் கெயின் பாலிசி

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தேவைக்கேற்ப பாலிசியைத் தகவமைத்துக்கொள்ளும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களின் தேர்வுக்கேற்ப பாலிசிக்கான பிரீமியம் தொகை மாறுபடும்.

பொதுவாக, மருத்துவக் காப்பீட்டு திட்டங் களில் மூன்று ஆண்டுக் கால காத்திருப்பு காலம் இருக்கும். இந்தத் திட்டத்தில் காத்திருப்பு காலத்தையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு களாகக் குறைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தில் 65 வயதுடைய நபர்கள் வரை சேர்ந்து பயன் பெற முடியும். ரூ.3 லட்சம் முதல் ஒரு கோடி வரை காப்பீடு பெற முடியும். அதிகபட்சமாக, குடும்ப உறுப்பினர் கள் 12 நபர்கள் வரை தாத்தா, பாட்டி யிலிருந்து பேரக்குழந்தைகள் வரை சேர்ந்து கூட்டாகக் காப்பீட்டைப் பெற முடியும். மருத்துவக் காப்பீடு தேவைப்படுபவர்கள் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

டாடா ஏ.ஐ.ஏ: ஸ்மார்ட் வால்யூ இன்கம் பிளான்

டாடா ஏ.ஐ.ஏ நிறுவனம், பாலிசி தாரர்கள் கட்டும் பிரீமியத் தொகைக் கேற்ப போனஸ் தொகையை மாற்றி யமைக்கும் வசதியுள்ள புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பாரம்பர்ய வகை திட்ட மாகும்.

இந்தத் திட்டத்தில் ஒரு வயது முதல் 65 வயது நிரம்பியவர்கள் வரை சேர முடியும். ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தினாலும் திட்டக் காலம் முழுவதும் காப்பீடு கிடைக்கும் வசதி உள்ளது.

பெண்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகின்றன. காப்பீட்டுத் தொகை மற்றும் நிச்சய வருமானம் கிடைக்கும் இந்தத் திட்டத்தில் காப்பீடு தேவைப் படுபவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: டெபாசிட் வட்டி உயர்வு

சென்ற மாதம் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களைத் தற்போது உயர்த்தியுள்ளது. தனிநபர் மற்றும் சீனியர் சிட்டிசன் களுக்கான ஓராண்டுக்கு மேற்பட்ட வைப்பு நிதிக்கு 0.25% வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டுக் கான டெபாசிட் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. அதிகபட்சமாக மூன்று ஆண்டு டிரஸ்ட்டுகளுக்கான வைப்பு நிதி வட்டி விகிதங்களை 0.75% வரை உயர்த்தியுள்ளது.

சென்ற மாதத்தின் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு, பல வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வைப்பு நிதி மற்றும் கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இது பற்றிய விவரங்களை வாசகர்கள் தமது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism