Published:Updated:

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எல்.ஐ.சி-யின் புதிய திட்டம் தன் சஞ்சய் அறிமுகம்...

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) ‘தன் சஞ்சய்’ (Dhan Sanchay) என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர் சேமிப்புக் காப்பீட்டுத் திட்ட மாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பாலிசிதாரர் களுக்கு காப்பீடு மற்றும் சேமிப்பை வழங்குகிறது. இது முதிர்வுக் காலத்தில் உத்தரவாதமான வருவாயை வழங்கும் திட்டமாகும்.

இந்தப் புதிய திட்டம் குறைந்தபட்சம் 5 முதல் அதிக பட்சம் 15 ஆண்டுக்காலத்துக்கு கிடைக்கிறது. பாலிசிக்கான பிரீமியத்தை பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ, தங்களுக்கு ஏற்ற வகையிலோ செலுத்தும் வசதி உள்ளது.

பாலிசிதாரர் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டால், அவர் தேர்வு செய்தபடி அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை மொத்த மாகவோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையாகவோ வழங்கப் படும்.

அவசரத் தேவைக்கு பாலிசித் தொகையிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளவும் வசதி உள்ளது.

பாலிசி காலத்துக்கேற்ப 3 வயது முதல் இந்த பாலிசித் திட்டத்தில் சேர முடியும். எல்.ஐ.சி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசித் திட்டத்தில் சேர முடியும். www.licindia.in. என்ற இணையதளம் மூலமும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம்!

பஜாஜ் ஃபைனான்ஸ், டி.பி.எஸ் பேங்க் கடன் அட்டை

விசா கார்டு மூலம் செயல் படுத்தப்படும் ‘பஜாஜ் ஃபின் சர்வ் டி.பி.எஸ் பேங்க் சூப்பர் கார்டு’ என்ற கோ பிராண்ட் அட்டையை பஜாஜ் ஃபைனான்ஸுடன் இணைந்து கிரெடிட் கார்டை டி.பி.எஸ் பேங்க் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் பணப்பை எனப்படும் வாலெட்டுகளை ஒழுங்கமைப் பதற்காக வடிவமைக்கப்பட்ட சூப்பர் கார்டு, பலவிதமான கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.

இந்தப் புதிய சூப்பர் கார்டானது (SuperCard) ஆறு வகைகளில் கிடைக்கும். இந்தக் கடன் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கும்போது ரூ.20,000 பணப் புள்ளிகள் வரை வரவேற்பு போனஸை வழங்குகிறது. வாடிக்கையாளர் தமது மாதாந்தர அளவைச் செலவழிக்கும்போது வாடிக்கையாளர்களின் பணப் புள்ளிகளை ஒவ்வொரு மாதமும் 10 மடங்கு வரை பெருக்குகிறது.

வாடிக்கையாளர்கள் டி.பி.எஸ் அட்டை, மொபைல் செயலிகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் செயலிகள் மூலம் 20 மடங்கு விரைவுப் பணப்புள்ளிகளைப் பெறலாம். பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் தொடர்பான சிறப்பு சுகாதாரத் திட்டத்தின் பலன்களையும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பெறமுடியும். புதிய கடன் அட்டை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம்!

மீண்டும் செஞ்சுரி எஸ்.ஐ.பி இன்ஷூரன்ஸ்

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செஞ்சுரி சிஸ்ட்மேடிக் இன்வெஸ்ட் மென்ட் மூலம் முதலீடு செய்யும்போது ரூ.50 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 51 வயதுள்ள அனைவருக்கும் இந்த இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும். திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் முதலீட்டுப் பணம் போன்று பத்து மடங்கும், இரண்டாவது ஆண்டில் முதலீட்டுத் தொகை போன்று 50 மடங்கும், மூன்றாவது ஆண்டி லிருந்து முதலீட்டுத் தொகை போன்று 100 மடங்கும் இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வது நிறுத்தப்பட்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது. ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் வாடிக்கை யாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டு பலன்களை இந்தத் திட்டத்தில் சேர்வதன் மூலம் பெறுவார்கள். அதனால் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism