Published:Updated:

தங்கத்தில் முதலீடு... சாவரின் தங்க பாண்டுகள் அறிமுகம்!

தங்க பாண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
தங்க பாண்டுகள்

சந்தைக்குப் புதுசு

தங்கத்தில் முதலீடு... சாவரின் தங்க பாண்டுகள் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
தங்க பாண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
தங்க பாண்டுகள்

சசிரேகா

அண்மையில் அறிமுக மான நிதிசார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ்: சிறுவர்களுக்கான சேவிங்ஸ் திட்டம்

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனம் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை நிரம்பிய சிறுவர், சிறுமிகளுக்கான பிரத்யேக என்ஜாய் (ENJOI) என்கிற சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களின் கட்டுப் பாட்டில் இந்தக் கணக்கை நிர்வகிக்கலாம். நிதி நிர்வாகத்தை சிறு வயதிலேயே சிறார்கள் கற்றுக்கொள் வதற்கு இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகபட்சமாக 7% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 ரூபாயி லிருந்து ரெக்கரிங் டெபாசிட் செய்யும் வசதியுள்ளது. 10,000 ரூபாயிலிருந்து ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை இந்தத் திட்டத்தில் மேற்கொள்ள லாம்.

10 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு பெற்றோரின் அனுமதியுடன் டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டை மூலம் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும்போது அதிக சலுகைகள் கிடைக்கும்.உங்கள் வீட்டு குட்டிகளிடம் நிதிப் பழக்கத்தைக் கொண்டு வர இந்தப் புதிய சேமிப்புக் கணக்கு அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

தங்கத்தில் முதலீடு... சாவரின் தங்க பாண்டுகள் அறிமுகம்!

நடப்பு நிதியாண்டுக்கான சாவரின் தங்கப் பாண்டுகள் அறிமுகம்

மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டுக்கான தங்க சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதல் தவணையில் இந்த ஜூன் 20 முதல் 24 வரையில் முதலீடு செய்திருக்க முடியும். இரண்டாவது தவணையில் ஆகஸ்ட் 22 முதல் 26 வரை யிலும் இந்தத் திட்டத்தில் முதலீட்டைச் செய்யலாம்.

டிஜிட்டல் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய் தால், கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் முதலீட்டுக்கு முதிர்வுக் காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற பிறகு, பணம் தேவைப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 1 கிராம் என்ற அளவில் இருந்து அதிகபட்சமாக 4 கிலோ தங்கம் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகளைச் சந்திக்க நேரும். டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும்போது இது போன்ற இழப்புகளும் அல்லது நகை திருடு போகும் அபாயங்களும் இருக்காது. தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

தங்கத்தில் முதலீடு... சாவரின் தங்க பாண்டுகள் அறிமுகம்!

எடில்வெய்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம்: ரூ.10,000 கேஷ் அட்வான்ஸ்...

எடில்வெய்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம், தமது நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைகளில் பாலிசிதாரர் அனுமதிக்கப்படும்போது ரூ.10,000 கேஷ் அட்வான்ஸ் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எமர்ஜென்சி நேரத்தில் தமது வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைக்கு செல்கின்றனர். அந்த மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாததாக இருந்தால், கேஷ்லெஸ் முறையில் சிகிச்சை பெற முடியாது. அவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தப் புதிய மாற்றத்தை தமது காப்பீட்டுத் திட்டங்களில் எடில்வெய்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்த அறிமுகம் மூலம் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் ரூ.10,000 வரை உடனடியாக வாடிக்கையாளருக்குக் கிடைக்கும். இந்தப் பணத்தை அட்மிஷன் மற்றும் முதற்கட்ட சிகிச்சைகளுக்கு அவர் பயன்படுத்திக்கொள்ளலாம். பிறகு, சிகிச்சை செலவுகள் க்ளெய்ம் செய்யப்படும்போது அட்வான்ஸ் தொகையாகத் தரப்பட்ட இந்த ரூ.10,000 கழித்துக் கொள்ளப்பட்டு, மீதித் தொகை வழங்கப்படும்.

எடில்வெய்ஸ் நிறுவனத்தில் பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தேவைப்படும்போது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்!