Published:Updated:

நிலையான வருமானம் தரும் புதிய டெபாசிட் திட்டம்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

நிலையான வருமானம் தரும் புதிய டெபாசிட் திட்டம்..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எஸ்.பி.ஐ: புதிய டெபாசிட் திட்டம்...

எஸ்.பி.ஐ வங்கி ஒரு முறை டெபாசிட் செய்தால், குறிப்பிட்ட காலத்துக்கு நிச்சய வருமானத்தை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால், வங்கிகள் பல புதிய டெபாசிட் திட்டங் களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்தப் புதிய திட்டத்தின் திட்டக் காலமாக மூன்று முதல் பத்து ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஒரு முறை டெபாசிட் செய்த தொகையிலிருந்து மாதம்தோறும் வட்டி மற்றும் குறிப்பிட்ட அசலைத் திரும்பப் பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

வயதானவர்களுக்கு இந்தத் திட்டத்தில் கூடுதல் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

திருமணம், மருத்துவச் செலவுகளுக்காக 75% வரை முதலீடு செய்த பணத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது.

நீண்ட காலத்துக்கு நிலை யான வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

நிலையான வருமானம் தரும்
புதிய டெபாசிட் திட்டம்..!

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: புதிய கடன் அட்டை

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், தன் வாடிக்கையாளர் களின் விருப்பதந்துக்கேற்ப தேவையான வசதிகளை வடிவமைத்துக்கொள்ளும் வகையில் லிட் (LIT - Live it Today) என்ற புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

ஷாப்பிங், டிராவல், பெட்ரோல், சினிமா படங்கள் என வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் வசதி களை தமது தேவைக்கு ஏற்ப இந்தக் கடன் அட்டையில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது சந்தையில் பலவித வசதிகள் கொண்ட கடன் அட்டைகள் இருக் கின்றன. உதாரணமாக, விமானக் கட்டணங்களில் அதிக சலுகை தரும் கடன் அட்டையைப் பெற்ற ஒருவர் அதிக விமானப் பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் அந்தக் கடன் அட்டை அவருக்கு மிகுந்த பலனளிக்காது. மேலும், ஒவ்வொரு வசதிக்கும் தனித்தனி கடன் அட்டைகளைப் பெறுவதும் மிகுந்த பலனளிக்காது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இந்தப் புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

பல விதமான சேவைகளை ஒரே கடன் அட்டை மூலம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிலையான வருமானம் தரும்
புதிய டெபாசிட் திட்டம்..!

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷூரன்ஸ்: புதிய ஓ.பி.டி திட்டம்...

தனிநபர்கள் செய்யும் மருத்துவச் செலவுகளில் ஆண்டுதோறும் 65% வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்குதான் செலவாகிறது.

குறிப்பாக, மருத்துவர் கன்சல்டேஷன், மருந்துக் கான செலவுகள், லேபரட்டரி செலவுகள் போன்ற வெளி நோயாளிகளுக்கான செலவுகள்தான் அதிகம் பிடிக்கின்றன.

இது போன்ற செலவுகளுக்கு எந்த மருத்துவக் காப்பீடும் கிடைக்காது. தேவையான மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் இது போன்ற செலவுகளுக்கு வாடிக்கையாளர்கள் தன் கையில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும்.

இவர்களுக்கு பலனளிக்கும் வகையில் மணிபால் சிக்னா மருத்துவக் காப்பீடு நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வெளி நோயாளி களுக்கான செலவுகளுக்கு க்ளெய்ம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் மருத்துவர் கன்சல்டேஷன் முதல் மருந்துகளுக்கான செலவுகள் வரை அனைத்துக் கும் காப்பீடு கிடைக்கும்.

மருத்துவக் காப்பீடு என்பது இந்தக் காலத்தில் மிகவும் அவசியம். மருத்துவக் காப்பீடு தேவைப் படுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்!