Published:Updated:

அதிக ரிவார்டு பாயின்ட் தரும் ஆதித்ய பிர்லா கிரெடிட் கார்டு..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

அதிக ரிவார்டு பாயின்ட் தரும் ஆதித்ய பிர்லா கிரெடிட் கார்டு..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான நிதிசார்ந்த திட்டங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்ஷூரன்ஸ்: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...

ஜப்பானைத் தலைமையிட மாகக் கொண்ட யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கர்நாடகா வங்கி மற்றும் டாபர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் விபத்து, 14 வகை நோய்களுக்கான சிகிச்சை, 26 ரைடர் பாலிசிகள் ஆகியவற்றை வாடிக்கை யாளரின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து மருத்துவக் காப்பீட்டை வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இதில் அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். மூன்று மாதக் குழந்தை முதல் 75 வயது நிரம்பிய நபர்கள் வரை மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள முடியும். புதிதாக மருத்துவக் காப்பீடு தேவைப் படுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிக ரிவார்டு பாயின்ட் தரும்
ஆதித்ய பிர்லா கிரெடிட் கார்டு..!

எடெல்வெய்ஸ்: பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்...

எடெல்வெய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கடன் பத்திரங் களுக்கு அதிகபட்சமாக 9.95% வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டத் தில் ஜூலை 4 - 26 வரை முதலீடு செய்யலாம். குறைந்த பட்சம் ரூ.10,000 இதில் முதலீடு செய்யலாம்.

இதன் திட்டக் காலமாக 2 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு காலம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யும் காலத்துக்கான வட்டியை ஒவ்வொரு மாதத் திலும் அல்லது ஒவ்வொரு வருட முடிவிலும் அல்லது திட்ட காலம் முடிந்த பிறகு வாங்கிக்கொள்ளும் வசதி உள்ளது. சற்று ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட் டாளர்கள் வங்கி எஃப்.டி.யை விட அதிக லாபம் பெற இந்தப் புதிய திட்டத்தில் சேரலாம்.

கனரா வங்கி அறிமுகம் செய்துள்ள புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய பிறகு வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ரூ.2 கோடிக்குக் குறைவான குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இதன் திட்டக் காலம் ஒரு வருடத்துக்கும் சற்று குறைவாக அதாவது, 333 நாள்களைக் கொண்டுள்ளது. இதில் செய்யும் முதலீட்டுக்கு 5.1% வட்டி கிடைக்கும். சீனியர் சிட்டிசன்களுக்கு சற்று கூடுதலாக 5.6% வட்டி கிடைக்கும்.

ஒரு வருடத்துக்கும் குறைவான முதலீட்டை மேற்கொள்ள நினைப்பவர்கள் ரிஸ்க் எதுவுமில்லாத மிகவும் பாதுகாப்பான இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிக ரிவார்டு பாயின்ட் தரும்
ஆதித்ய பிர்லா கிரெடிட் கார்டு..!

எஸ்.பி.ஐ கார்டு, ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ்: புதிய கடன் அட்டை

ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ், எஸ்.பி.ஐ கார்டு இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளன. இந்தக் கடன் அட்டை ஆதித்ய பிர்லா எஸ்.பி.ஐ கார்டு மற்றும் ஆதித்ய பிர்லா எஸ்.பி.ஐ கார்டு ‘செலக்ட்’ என்று இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் செலவு செய்பவர் களுக்குக் கூடுதலாக ரிவார்டு பாயிட்டுகள் கிடைக்கும் வகையில் இந்தக் கடன் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒவ்வொரு 100 ரூபாய் செலவழிக்கும் போதும் 20 ரிவார்டு பாயின்டுகள் வரை கிடைக்கும்.

ஷாப்பிங், டைனிங், ஹோட்டல், பொழுதுபோக்கு என்று பல்வேறு துறைகள் சார்ந்த இடங்களில் கடன் அட்டையைப் பயன்படுத்தி கூடுதல் பாயின்டுகளைப் பெறலாம். புதிய கடன் அட்டை வேண்டும் என்கிற வர்கள் ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.