Published:Updated:

காப்பீடு மற்றும் முதலீடு... புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

காப்பீடு மற்றும் முதலீடு... புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் கேப்பிட்டல் கேரன்டி சொல்யூஷன் (Max Life Smart Capital Guarantee Solution)

மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையுடன் தொடர்புடைய புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (ULIP) அறிமுகம் செய்திருக்கிறது. காப்பீடு மற்றும் முதலீடு இணைந்தது இந்தத் திட்டம். இதில் கட்டப்படும் பிரீமியத் தொகை முதிர்வுக் காலத்தில் திருப்பி அளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பொதுவாக, யூலிப் திட்டங்களில் பராமரிப்புச் செலவு சற்று கூடுதலாக இருக்கும். என்றாலும், நீண்டகால நோக்கில் பாரம்பர்ய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட கூடுதல் லாபம் கிடைப்பதற்கு இந்தத் திட்டங்களில் அதிக வாய்ப்புள்ளது. அதனால் காப்பீட்டுடன் சேர்ந்து சேமிப்பை விரும்புபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

காப்பீடு மற்றும் முதலீடு... புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

வொயிட் ஒக் கேப்பிட்டல் ஃபிளேக்ஸிகேப் மியூச்சுவல் ஃபண்ட் (White Oak Flexi cap Mutual Fund)

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட வொயிட் ஒக் கேப்பிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தனது முதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகை பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் வகையில் ஃபிளேக்ஸிகேப் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தில் ஜூலை 26-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடையவர்கள் மட்டும் சேர்ந்து பயன் பெறலாம்.