Published:Updated:

7% முதல் 9.5% வரை வட்டி... புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

7% முதல் 9.5% வரை வட்டி... புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில்அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எடெல்வைஸ் ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் (Edelweiss Focussed Equity Fund)

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜூலை 25-ம் தேதி வரை முதலீட்டை மேற் கொள்ளலாம். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற் கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

7% முதல் 9.5% வரை வட்டி... புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு!

கொசமட்டம் ஃபைனான்ஸ்: பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட கொசமட்டம் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்கு களாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை முதலீட்டை மேற் கொள்ளலாம்.

400 நாள்கள் முதல் அதிகபட்சமாக 88 மாதங்கள் வரை ஏழு வகைகளில் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 7% - 9.5% வரை வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.350 கோடி வரை முதலீடு திரட்டப்பட இருக்கிறது. வட்டித் தொகையை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலோ திட்டக் கால முடிவிலோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்கும் இந்தத் திட்டத்தில் மிதமான ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.