Published:Updated:

மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய ஃபண்ட் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய ஃபண்ட் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு இன்ஷூரன்ஸ்: மோட்டார் ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் (Motor Floater Insurance)

ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் அனைத்து வாகனங்களுக்கும் சேர்த்து ஒரே காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஃப்ளோட் டர் பாலிசியை ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு வாகனங்களுக்கு பல காப்பீட்டுத் திட்டங்களை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அனைத்து வாகனங் களுக்கும் ஒரே காப்பீடு என்பதால், சுலபமாகக் கையாள முடியும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே காப்பீடு எடுப்பதுபோல அனைத்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங் களுக்கும் சேர்த்து ஒரே காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் காப்பீட்டு பிரீமியம் விலையில் சலுகை யும் கிடைக்கும். நோ க்ளெய்ம் போனஸ் தனித் தனியாக ஒவ்வொரு வாகனத்துக்கும் தரப்படும்.

மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய ஃபண்ட் திட்டம்!

ஃப்ராங்க்ளின் இந்தியா பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் (Franklin India Balan ced Advantage Fund)

ஃப்ராங்க்ளின் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பல பொருளாதார பிரச்னை களால் பாதிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 30 வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 65% வரை பங்குகளில் இந்தத் திட்டம் முதலீடு செய்யும்.

பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் என்று பிரித்து முதலீடு செய்யப் படும் திட்டம் இது என்பதால், மிதமான ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மணிப்பால் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ்: ஸ்விட்ச் ஆன், ஸ்விட்ச் ஆஃப் வசதி

மணிப்பால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தமது காப்பீட்டுக் காலத்தில் இரண்டாவது ஆண்டு முதல் 30 நாள்கள் வரை காப்பீட்டுத் திட்டத்தை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உதாரணமாக, வாடிக்கையாளர்கள் வெளிநாடு களுக்குப் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்குக் காப்பீடு நமது நாட்டில் தேவைப்படாது. அதுபோன்ற தருணத்தில் தமது காப்பீட்டுத் திட்டத்தை ஸ்விட்ச் ஆஃப் செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யும் போது பிரீமியத் தொகையில் சலுகை வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த வசதியைத் திட்ட காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களில் பயன்படுத்த முடியாது. மருத்துவக் காப்பீடு எடுத் திருக்கும் மணிப்பால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய வசதியை தேவைப் பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மோதிலால் ஆஸ்வால் எஸ்&பி பி.எஸ்.இ குவாலிட்டி இ.டி.எஃப் ஃபண்ட் (Motilal Oswal S&P BSE Quality ETF Fund)

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் எஸ்&பி குறியீட்டில் முதலீடு செய்யும் வகையில் இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்ட் என்று இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். பேசிவ் வகை திட்டம் என்பதால், இதன் பராமரிப்பு செலவு குறைவு. குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகை களில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

டி.பி.எஸ் வங்கி: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு...

மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால், டி.பி.எஸ் வங்கி டெபாசிட் களுக்கான தமது வட்டி விகிதங்களை 0.5% அதிகரித்து உள்ளது. ஆண்டுக்கு அதிகபட்சமாகக் கூட்டு வட்டி அடிப்படையில் 7.27% டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 7.95% வரை வட்டி வழங்குகிறது.