பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மிதமான ரிஸ்க்... அதிக வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசிரேகா

அண்மையில் சந்தை யில் வெளியான முதலீட்டுத் திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இ.டி.எஃப்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இ.டி.எஃப் மற்றும் நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் பண்ட் ஆகிய இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த இரு திட்டங்களும் நேரடியாக நிஃப்டி குறியீட் டில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டமாகும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பேசிவ் வகை திட்டம் என்பதால், இந்தத் திட்டத்தில் பராமரிப்பு செலவு குறைவாகும்.

என்றாலும், இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

மிதமான ரிஸ்க்... அதிக வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

டாடா ஹவுஸிங் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் (Tata Housing Opportunity Fund)

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வீடு கட்டுமானம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய கருத்து அடிப் படையிலான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்த பட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. ஓராண்டுக்குள் வெளியேறும்பட்சத்தில் 1% வரை வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுவாக, தீம் அடிப் படையிலான திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

மிதமான ரிஸ்க்... அதிக வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

நிவா பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ரைடர் பாலிசி

நிவா பூபா நிறுவனம் ஸ்மார்ட் ஹெல்த் என்கிற புதிய ரைடர் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது. சர்க்கரை வியாதி மற்றும் அதிக பிளட் பிரஷர் உடைய நோயாளிகளுக்கு காப்பீடு எடுத்த முதல் நாளிலிருந்து பலன் கிடைக்கும் வகையில் இந்த ரைடர் பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, நமது நாட்டில் அதிக அளவு மக்கள் இந்த இரண்டு பிரச்னைகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கும் போது காத்திருப்புக் காலமாக இரண்டு முதல் நான்கு ஆண்டுக் காலம் இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தப் புதிய ரைடர் பாலிசி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு இலவச ஹெல்த் செக்அப் வசதியும் வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு வியாதிகளுக்கு கவர் இல்லாதபட்சத்தில் நிவா பூபா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய ரைடர் பாலிசியை எடுத்துப் பயன் பெறலாம்.

முத்தூட் ஃபின்கார்ப்: புதிய என்.சி.டி திட்டம்...

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத புதிய என்.சி.டி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டம் ஏழு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதிக பட்சமாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 8.35% வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 1-ம் தேதி வரை சேரமுடியும். திட்ட காலமாக 27 முதல் 96 மாதங்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாதம் தோறும் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது.

வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் வேண்டும் என்கிற மிதமான ரிஸ்க் உடைய முதலீட்டாளர்கள் முத்தூட் பின்கார்ப் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.