Published:Updated:

வங்கியைவிட கூடுதல் லாபம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

வங்கியைவிட கூடுதல் லாபம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசிரேகா

அண்மையில் சந்தையில் புதிதாக அறிமுகமான திட்டங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

ஃப்ராங்க்ளின் இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (Franklin India Balanced Advantage Fund)

ஃப்ராங்க்ளின் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. சந்தை ஏற்றம் காணும்போது பங்குச் சந்தை முதலீடு மூலமும், சந்தை சரியும் போது கடன் பத்திரங்களின் வாயிலாகவும் வருமானம் கிடைப்பதால் இது மிதமான ரிஸ்க் உடைய திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டை மேற் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முதலீடு செய்ய லாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. பேலன்ஸ்டு வகை திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கொடுக்கும் என்பதால், மிதமான ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ள முதலீட்டாளர் கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

ஜே.எம் ஷார்ட் டூரேஷன் ஃபண்ட் (JM Short Duration Fund)

குறுகிய காலத்தில் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்து வங்கியில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக வருமானம் கிடைக்க உதவும் வகையில் ஜே.எம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி முழுவதும் கடன் பத்திரங்கள் மற்றும் பிற பணச் சந்தை பத்திரங் களில் முதலீடு செய்யப்படும். நம்மில் பலர் சேமிப்புக் கணக்குகளில் பணம் சேமித்து வைத்திருப்போம். நிறுவ னங்கள் கரன்ட் அக்கவுன்டில் அதிக பணத்தை வைத்திருக் கின்றன.

இதுபோன்று கரன்ட் அக்கவுன்டில் வைத்திருக்கும் பணத்துக்கு வட்டி எதுவும் வழங்கப்படுவதில்லை. அந்தப் பணத்தை இந்தக் கணக்கில் முதலீடு செய்தால் 5 - 6% வரை வட்டி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இதில் செய்யும் முதலீட்டை குறுகிய காலத்தில் அதிகபட்சம் மூன்று நாள்களில் மீண்டும் நமது கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதனால் சேமிப்பு / நடப்புக் கணக்கில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவி நிஃப்டி இந்தியா மேனுஃபேக்சரிங் இண்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty India Manufacturing Index Fund)

நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி மேனுஃபேக்சரிங் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இது பேசிவ் வகை திட்டம் என்பதால், இதன் பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.

குரோத் மற்றும் டிவிடெண்ட் என இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டு உள்ளது. இது செக்டோரல் வகைத் திட்டம் என்பதால், ரிஸ்க் அதிக இருக்கும். மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

ஹெச்.டி.எஃப்.சி எர்கோ: பே ஆஸ் யூ டிரைவ் திட்டம்...

காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயணிக்கும் கிலோ மீட்டர் அளவைப் பொறுத்து பிரீமியத் தொகையில் சலுகைகள் வழங்கும் புதிய திட்டத்தை ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 கிலோ மீட்டருக்குக் குறைவாக வண்டியைப் பயன்படுத்தி இருந்தால் காப்பீட்டு பிரீமியம் தொகையில் 25% வரை சலுகை கிடைக்கும். குறைவாக வண்டி ஓட்டும் பலருக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்திருக்கிறது.

புதிதாக மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.