Published:Updated:

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு... புதிய ஃபண்ட் திட்டம் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு... புதிய ஃபண்ட் திட்டம் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பி.எஸ்.யு ஈக்விட்டி ஃபண்ட் (ICICI Prudential PSU Equity Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள லாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

கடந்த பல வருடங்களாகப் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய லாபத்தை முதலீட் டாளர்களுக்கு வழங்க வில்லை. ஆனால், தற்போது பல பொதுத்துறை நிறுவனங் கள் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் நல்ல லாபத்தை ஈட்டத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வருங் காலத்தில் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு நல்ல லாபத்தைத் தருவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், பல பொதுத்துறை நிறுவனங்கள் அதிகமான டிவிடெண்ட் வழங்கி வருகின்றன. ஆனாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு... புதிய ஃபண்ட் திட்டம் அறிமுகம்!

எடெல்வைஸ் கோல்டு அண்ட் சில்வர் இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Edelweiss Gold and Silver ETF Fund of Fund)

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 7-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இது பேசிவ் வகை திட்டம் என்பதால், இதன் பராமரிப்புச் செலவு குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி நகையாக வாங்கிச் சேர்க்கும்போது செய்கூலி மற்றும் சேதாரம் என்று இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு மாற்றாக, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு: 14 புதிய திட்டங்கள்

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனம் ஹெல்த், மோட்டார் மற்றும் கார்ப்பரேட் இன்ஷூரன்ஸ் சார்ந்த 14 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதைத் தனியாகவோ, வாடிக்கையாளர் ஏற்கெனவே எடுத்துள்ள காப்பீட்டுத் திட்டங்களுடன் ரைடர் பாலிசியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

வயதானவர்களின் மருத்துவக் காப்பீடு (கோல்டன் ஷீல்டு), வெளிநோயாளிகளுக்கான மருத்துவக் காப்பீடு (பெபிட்), வீட்டுக்கான காப்பீடு (கிளப் ராயல் ஹோம் இன்ஷூரன்ஸ்), சைபர் குற்றங்களுக்கான காப்பீடு (ரீடெய்ல் சைபர் லயபிலிட்டி இன்ஷூரன்ஸ்), பயணக் காப்பீடு (வோஏஜ் டிராவல் இன்ஷூரன்ஸ்) போன்ற 14 புதிய திட்டங்கள் இவற்றுள் அடக்கம்.

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனத்திடம் காப்பீடு எடுத்துள்ள வாடிக்கையாளர்கள் தமக்குத் தோதான ரைடர் பாலிசிகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு... புதிய ஃபண்ட் திட்டம் அறிமுகம்!

டாடா நியூ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி: புதிய கடன் அட்டை

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் டாடா நியூ (Tata Neu) இணைந்து இரண்டு புதிய கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. டாடா நியூ ப்ளஸ் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டாடா நியூ இன்பினிட்டி ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கிரெடிட் கார்டு என்று இரண்டு வகைகளில் இந்தக் கடன் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நியூ வாடிக்கையாளர்கள் இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி சேவைகள் பெறும்போது கூடுதல் ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும். ரூபே மற்றும் விசா என்று இரண்டு வகைகளில் இந்தக் கடன் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கடன் அட்டை வேண்டும் என்கிற வாடிக்கை யாளர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கி அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!