Published:Updated:

எல்.ஐ.சி-யின் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு! புதிய திட்டம் அறிமுகம்...

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

எல்.ஐ.சி-யின் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு! புதிய திட்டம் அறிமுகம்...

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சில...

எல்.ஐ.சி-யின் ஆரோக்கிய ரக்‌ஷா பாலிசி (Arogya Rakshak policy)

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் தனிநபராகவோ, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்தோ மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும்.

கணவன், மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு எடுக்கும் வசதி உள்ளது. 18 வயது முதல் 65 வயது நிரம்பிய அனைவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். குழந்தைகள் பிறந்த 91-வது நாள் முதல் இந்தத் திட்டத்தில் சேர முடியும். மருத்துவக் காப்பீடு, கொரோனாவுக்குப் பின் முதன்மையான நிதித் திட்டமாக உள்ளது. மருத்துவக் காப்பீடு வேண்டுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தைப் பரிசீலிக்கலாம்!

எல்.ஐ.சி-யின் அனைவருக்குமான 
மருத்துவக் காப்பீடு! புதிய திட்டம் அறிமுகம்...

நிப்பான் இந்தியா ஃப்ளெக்சிகேப் ஃபண்ட் (Nippon India Flexicap Fund)

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யும் வசதி உள்ளது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.

ஐ.டி.எஃப்.சி யு.எஸ் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் ஆஃப் ஃபண்ட் (IDFC US Equity Funds of Fund)

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தை யில் முதலீடு செய்யும் வகையில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில் திரட்டப்படும் நிதியானது அமெரிக்காவில் பிரபலமான ஜே.பி மார்கன் யு.எஸ் குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டம் பெரும்பாலும் அமெரிக்கச் சந்தையில் உள்ள லார்ஜ்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும். இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம். முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட முதலீட் டாளர்கள் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.

மஹிந்திரா மேனுலைஃப் ஃப்ளெக்ஸி கேப் யோஜனா (Mahindra Manulife Flexicap Yojana)

மஹிந்திரா மேனுலைஃப் நிறுவனம் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாம்!