Published:Updated:

9.54% வட்டி தரும் புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

9.54% வட்டி தரும் புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான புதிய திட்டங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

யூனியன் ரிடையர்மென்ட் ஃபண்ட் (Union Retirement Fund)

யூனியன் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் புதிதாக ஓய்வூதியம் பெறுவ தற்கு உதவிடும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத் தில் செப்டம்பர் 15-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள் ளலாம்.

இதில் திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் பிற பண முதலீட்டுப் பத்திரங் களில் கலவையாக முதலீடு செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய் வதற்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணங்கள் கிடையாது.

மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் நீண்ட கால முதலீட்டு நோக்கை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட்: புதிய திட்டங்கள்

ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 50 வேல்யூ 20 இ.டி.எஃப், ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 குவாலிட்டி 30 இ.டி.எஃப் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி குரோத் செக்டார் 15 இ.டி.எஃப் ஆகிய மூன்று புதிய திட்டங்களை ஹெச்.டி. எஃப்.சி அஸெட் மேனேஜ் மென்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டங்களில் செப்டம்பர் 20-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள லாம். நிஃப்டி குறியீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இவை பேசிவ் வகை திட்டம் என்பதால், இந்தத் திட்டங்களை நிர்வகிக்க ஆகும் செலவு குறைவாகும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் அனைத்திலும் திரட்டப்படும் முதலீடு முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

9.54% வட்டி தரும் புதிய என்.சி.டி திட்டம்!

கோட்டக் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Kotak Business Cycle Fund)

கோட்டக் மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் நிறுவனங்களின் வளர்ச்சி அடையும் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டிலும் பொதுவாக, குறிப்பிட்ட துறைகள் வளர்ச்சி அடைவது வாடிக்கையாகும். கொரோனா காலகட்டங்களில் ஃபார்மா துறை சிறப்பான வளர்ச்சி கண்டது.

சென்ற ஆண்டு மெட்டல் துறை வளர்ச்சி அடைந்தது. அதுபோல, துறைகளின் வளர்ச்சியைக் கணித்து முதலீடு செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 21-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தை களில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்: புதிய என்.சி.டி திட்டங்கள்

இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத புதிய கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகபட்சமாக 9.54% வட்டி கிடைக்கும்.

திட்டக் காலமாக 24 மாதங்கள் முதல் 60 மாதங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதிக்கு கிடைக்கும் வட்டித் தொகையை ஒவ்வொரு மாதத்திலோ, ஒவ்வோர் ஆண்டின் முடிவிலோ, திட்ட கால முடிவிலோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

குறைந்த அளவு ரிஸ்க் உள்ள இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டியைவிட கூடுதலாக வருமானம் கிடைக்கும். அதனால் மிதமான ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.