Published:Updated:

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டம்..!

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

சந்தைக்குப் புதுசு

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டம்..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

சசி ரேகா

அண்மையில் அறிமுக மான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

வைட் ஓக் கேப்பிடல் டாக்ஸ் சேவர் ஃபண்ட் (White Oak Capital Tax Saver Fund)

வைட் ஓக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வருமான வரி விலக்கு பெற உதவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கு செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன் விண்ணப் பிக்கலாம். குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகால லாக்இன் உடையது. டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டம்..!

எல்.ஐ.சி நியூ பென்ஷன் ப்ளஸ் திட்டம்

முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு முறையோ, குறிப்பிட்ட கால அளவுக்கோ பிரீமியம் செலுத்த வேண்டும். முதலீடு செய்யும் பிரீமியம் அளவுக் கேற்ப நிச்சயக்கப்பட்ட ஓய்வூதியம் முதலீட்டாளர் களுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது நான்கு வகையான யூனிட் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற பல கலவைகளில் இந்தத் திட்டம் முதலீடு செய்யும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பிரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். ஓய்வூதியம் வேண்டி முதலீடு செய்ய விரும்புபவர்கள் எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகம் செய் திருக்கும் இந்தப் புதிய திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

ஃபியூச்சர் ஜெனரலி ஹெல்த் அப்சல்யூட் திட்டம் (Future Generali Health Absolute Scheme)

ஃபியூச்சர் ஜெனரலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் பல புதிய பலன் களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பெண்களுக்குத் திட்டக் காலத்தில் குழந்தை பிறந்தால், திட்டக் காலம் முடியும் வரை குழந்தைக்கும் காப்பீட்டு உதவித்தொகை கிடைக்கும். காப்பீடு எடுத்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தால் கூடுதலாக ரூ.10,000 வரை காப்பீடு கிடைக்கும். குழந்தைக்கான தடுப்பூசிச் செலவுகளையும் இந்தக் காப்பீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கண் பார்வை தொடர்பாக லேசர் சர்ஜரி செய்யவும் காப்பீடு கிடைக்கும். இவ்வாறு பல சிறப்பு களுடன் அறிமுகமாகி இருக்கும் இந்தத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வேண்டுபவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

எல்.ஐ.சி அறிமுகப்படுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டம்..!

எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம்

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் புதிய திட்டத்தை பட்டி4ஸ்டடி (Buddy4study) நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற பள்ளி செல்லும் மாணவர்களுடைய பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டில் மாணவனின் சராசரி மதிப்பெண்கள் 75 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

மாணவனின் அடையாள அட்டை, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் குறித்த ஆவணங்கள், மதிப்பெண் சான்று, புகைப்படம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிக் குழந்தைகளின் படிப்புக்கு உதவும் இந்தப் புதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 15 ஆகும். தகுதி வாய்ந்த மாணவச் செல்வங்கள் எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் இந்தப் புதிய திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்!