Published:Updated:

11% வரை வருமானம்... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

11% வரை வருமானம்... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுக மான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி 50 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty 50 Equal Weight Index Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிஃப்டி குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இதுபோன்ற நிஃப்டி குறி யீடுகளில் முதலீடு செய்யும் போது நிறுவனப் பங்கின் வெயிட்டேஜைப் பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணம் பிரித்து முதலீடு செய்யப்படும். ஆனால், இந்தத் திட்டத்தில் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றுள்ள 50 நிறுவனங்களில் ஒரே அளவுக்கு பிரித்து பணம் முதலீடு செய்யப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப் பாகும்.

இதில் ஒருவர் 100 ரூபாய் முதலீடு செய்தால் நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களில் தலா இரண்டு ரூபாய் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 28-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

இது ஒரு பேசிவ் வகை திட்டம் என்பதால், இதன் பராமரிப்புச் செலவு குறை வாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் திரட்டப் படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

11% வரை வருமானம்... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

கேஎல்எம் ஆக்ஸிவா என்சிடி திட்டம் (KLM Axiva NCD Scheme)

நிதித் துறையில் முன்னணி நிறுவனமான கே.எல்.எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் நிறுவனம் ரூ.100 கோடி அளவுக்கு பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிடயுள்ளது. ஒரு பத்திரத்தின் விலை ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் குறைந்த பட்சம் ரூ.5,000-லிருந்து இந்த முதலீட்டை மேற்கொள்ளலாம்.

முதலீட்டுக் காலமாக 400 நாள்களில் இருந்து அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் முதலீட்டுக்கு அதிகபட்சமாக 11% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வட்டித் தொகையை ஒவ்வொரு மாதத்திலோ, முதலீட்டுக் கால முடிவிலோ பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 12-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்க விரும்புபவர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.

மோதிலால் ஆஸ்வால்: தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப் (Motilal Oswal Gold and Silver ETF)

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப் குறியீடு களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 7-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியில் 70% தங்கத்திலும், மீதமுள்ள 30% வெள்ளியிலும் முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த முதலீட்டுக் கலவை ஆராயப்பட்டு தேவையான மாறுதல்கள் செய்யப்படும்.

அதிகபட்சமாக 90:10 என்ற கலவையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கப்பத்திரங்களில் செய்யப் பட்ட முதலீடு 75% வரை வருமானம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற தங்க பத்திரங்களில் முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம் போன்ற இழப்பு களிலிருந்து தப்பிக்கலாம். அதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம்.

11% வரை வருமானம்... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

டாடா ஸ்டீல்: என்.சி.டி திட்டம் (Tata Steel NCD Scheme)

டாடா ஸ்டீல் நிறுவனம், ரூ.2,000 கோடி நிதி திரட்ட என்.சி.டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரு பத்திரத்தின் விலை ரூ.10 லட்சம் என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு கிரெடிட் ஏஜென்சிகள் சிறப்பான ரேட்டிங்குகளை அளித்துள்ளன.