நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மிதமான ரிஸ்க் உடைய புதிய மல்ட்டி இண்டெக்ஸ் ஃபண்ட்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுக மான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Auto Index Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் நிறுவனம், நமது நாட்டின் ஆட்டோமொபைல் குறியீட் டில் முதலீடு செய்யும் முதலாவது திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் குறியீடு 14% என்று அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. மேலும், வரும் 2030-ம் ஆண்டுக்குள் நமது நாடு ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி பெற்ற மூன்றாவது பெரிய நாடாகத் திகழும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இந்தத் துறை மேலும் வளர்ச்சி அடையும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 6-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இது ஒரு பேசிவ் வகை திட்டம் ஆதலால் இதை நிர்வகிக்க ஆகும் செலவுகள் குறைவு. என்றாலும், செக்டோரல் வகைத் திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மிதமான ரிஸ்க் உடைய புதிய மல்ட்டி இண்டெக்ஸ் ஃபண்ட்!

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மல்ட்டி இன்டெக்ஸ் ஃபண்ட் (Aditya Birla Sun Life Multi Index Fund)

ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிறுவனம் நமது நாடு மற்றும் பிற நாடுகளில் உள்ள முன்னணி பங்குச் சந்தை குறியீடுகள், இதர பண முதலீட்டுத் திட்டங்கள், தங்க மற்றும் வெள்ளி, பத்திரங்கள் ஆகிய பல குறியீடுகளில் முதலீடு செய்யும் வகையில் புதிய பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள லாம். நம் முதலீட்டு பணம் பல குறியீடுகளில் பரவலாக முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் பரவலாக்கம் செய்யப் படுகிறது. அதனால், மித மான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.

ஶ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் (Sriram Transport Finance FD Scheme)

ஶ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 9.73% வருமானம் தரும் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் 2022 திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். முதலீட்டுக் காலமாக ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வட்டி வருமானத்தை ஒவ்வொரு மாத முடிவிலோ, திட்ட கால முடிவிலோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

நீண்ட காலமாக இந்தத் துறையில் இருக்கும் நிறுவனம் ஆதலால், இந்தத் திட்டத்துக்கு சிறப்பான கிரெடிட் ரேட்டிங் அழிக்கப்பட்டுள்ளது. குறைந்த ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டை விடக் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெற நினைப்பவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

மிதமான ரிஸ்க் உடைய புதிய மல்ட்டி இண்டெக்ஸ் ஃபண்ட்!

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு: விழாக்கால சலுகைகள்...

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை வரும் 40 நாள்களில் பல பண்டிகைகள் அணிவகுத்துள்ளன. பண்டிகை கால ஷாப்பிங்கை லாபம் உள்ளதாக மாற்ற செப்டம்பர் 22 முதல் அக்டோபர் மாத இறுதிவரை பல விழாக்கால சலுகைகளை எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது.

ஃபிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ், ஹீரோ மோட்டார் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளுடன் கூட்டணி அமைத்து சலுகைகளை வழங்குகிறது.

10% வரை கேஷ்பேக், கூடுதல் ரிவார்ட் பாயின்டுகள், வட்டி இல்லா கடன் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த விழாக்கால கொண்டாட்டத்தில் அடக்கம்.

இந்த விழாக் காலத்தில் இந்தப் புதிய சலுகைகளைப் பயன்படுத்தி பயனீட்டாளர்கள் பயன் பெறலாம்.