பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அதிகபட்சமாக 10.1% வட்டி... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எடெல்வைஸ் புதிய என்.சி.டி திட்டம்...

முன்னணி ஃபைனான்ஷியல் சேவைகள் வழங்கும் எடெல்வைஸ் நிறுவனம் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரங்களை (என்.சி.டி) அறிமுகம் செய்கிறது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதிக்கு அதிக பட்சமாக 10.1% வட்டி கிடைக்கும்.

வட்டித் தொகையை ஒவ்வொரு மாத முடிவிலோ, ஆண்டு முடிவிலோ, முதிர்வுக் கால முடிவிலோ வாங்கிக்கொள்ளும் வசதி உள்ளது. மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக 10.1% வட்டி... புதிய என்.சி.டி திட்டம் அறிமுகம்!

முத்தூட் ஃபைனான்ஸ்: புதிய என்.சி.டி திட்டம்...

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்கு களாக மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரங்களை (என்.சி.டி) அறிமுகம் செய்கிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வுக் காலமாக 2 - 5 ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10,000-லிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதிக்கு 8% வரை வட்டி கிடைக்கும். வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் தரும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் முதலீடு செய்யலாம்.

ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸ்ட் மெச்சூரிட்டி 1359 டேஸ் பிளான் 2022...

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் 1359 நாள்கள் முதிர்வுக் காலத்தை கொண்ட புதிய கடன் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து முதலீட்டை ஆரம்பிக்க முடியும். நான்கு ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட இந்தத் திட்டத்தில் சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்!