நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யும் புதிய ஃபண்ட் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Transportation and Logistics Fund.)

ஐ .சி. ஐ. சி. ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் ஐந்து ஆண்டுகளில் லாஜிஸ்டிக்ஸ் செலவினங் களை 5% வரை குறைக்க வேண்டும் என சமீபத்தில் சொல்லியிருந்தார். இதன் காரணமாக, இந்தத் துறை சிறப்பான வளர்ச்சியைக் காணும் என்ற நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது 80% வரை இந்திய பங்கு சந்தைகளிலும், மீதமுள்ள 20% முதலீடு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் கடன் பத்திரங்களிலும் பிரித்து முதலீடு செய்யப்படும்.

ஆனாலும் செட்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை. அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யும் புதிய ஃபண்ட் அறிமுகம்!

ஆக்ஸிஸ் நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Axis NASDAQ 100 Fund of Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணிப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டாக் குறியீட்டில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 21-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் குறிப்பாக, அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் காரணமாக அதிக வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சென்ற ஆண்டு தொடக்கத்தில் 72 ரூபாய் என்ற அளவில் இருந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 82 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் டாலர் மதிப்பு உயர்வு காரணமாக 15% வரை வருமானம் முதலீட் டாளர்களுக்கு கிடைக்கும். அதனால் முதலீட்டாளர் களிடம் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. என்றாலும் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவ தால், ரிஸ்க் அதிகம் உள்ள இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

ஐ.டி.எஃப்.சி டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட் (IDFC TRANSPORTATION AND LOGISTICS FUND)

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் அக்டோபர் 18 வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 ஆகும். நுழைவுக் கட்டணம் இல்லை. ஓராண்டுக்குள் யூனிட்டுகளை விற்றால் 1% வெளியேறும் கட்டணம் இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் பணம் 80% வரை இந்திய பங்குச் சந்தைகளிலும், மீதமுள்ள 20% முதலீடு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் கடன் பத்திரங்களிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இது செக்டோரல் வகை திட்டம் என்பதால், அதிக ரிஸ்க் கொண்டது. அதனால் அதிக ரிஸ்க் எடுப்ப வர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

டாடா நிஃப்டி மிட்கேப் 150 மொமென்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Tata Nifty Musical 150 Momentum 50 Index Fund)

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மிட்கேப் குறியீடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 17- ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் முதலீட்டைத் தொடங்க முடியும். முழுவதும் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.