தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

8.05% வட்டி வருமானம் தரும் புதிய என்.சி.டி..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுக மான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

தேசிய நெடுஞ்சாலை இன்ஃப்ரா டிரஸ்ட் என்.சி.டி திட்டம் (National Highways Infra Trust NCD Scheme)

தேசிய நெடுஞ்சாலை துறையின் ஓர் அங்கமான இந்த நிறுவனம், ரூ.1,500 கோடி நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்டு புதிய என்.சி.டி திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் நவம்பர் 7-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒரு பத்திரத்தின் முகமதிப்பு 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் 10,000 ரூபாயில் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 8.05% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வட்டித் தொகை ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் முதலீட்டாளர் களுக்கு வழங்கப்படும். முதலீடு செய்த எட்டாவது ஆண்டிலிருந்து வட்டியுடன் ஒரு பத்திரத்துக்கு 50 ரூபாய் அசல் திரும்ப அளிக்கப்படும்.

இந்தத் திட்டம் அரசு அங்கீகாரம் பெற்ற திட்டம் என்பதால், ரிஸ்க் எதுவும் கிடையாது. வங்கி டெபா சிட்டைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்கும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

8.05%  வட்டி வருமானம் தரும் புதிய என்.சி.டி..!

ஶ்ரீராம் சிட்டி ஃபைனான்ஸ்: தசரா தீபாவளி தமாக்கா

ராம் சிட்டி ஃபைனான்ஸ் நிறுவனம் இரண்டு சக்கர வாகனங்களுக்கு 5.5% என்ற மிகக் குறைந்த அளவில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் கடனுக் கான பரிசீலனை கட்டணம் எதுவும் இல்லை.

இந்தத் திட்டத்தில் வாகனம் வாங்கும் வாடிக்கை யாளர்கள் தவணைத் தொகையை முழுவதும் தவறாமல் செலுத்தும்போது ஒரு மாத தவணை தள்ளுபடி செய்யப்படும். மறைமுகக் கட்டணங்கள் எதுவும் கிடை யாது. பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியுடன் செலவிட இந்தத் திட்டம், வாடிக்கை யாளர்களுக்குப் பெரிதும் உதவும் என்று அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 வரை இந்தத் திட்டத்தில் வாடிக்கை யாளர்கள் வாகனங்களை வாங்கலாம். இருசக்கர வாகனம் வாங்க விரும்பும் வாசகர்கள் ராம் சிட்டி ஃபைனான்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தச் சிறப்பு சலுகைத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8.05%  வட்டி வருமானம் தரும் புதிய என்.சி.டி..!

ஹெச்.டி.எஃப்.சி புதிய வீட்டுக் கடன்களுக்கு வட்டிச் சலுகை அறிவிப்பு

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிதாக வீட்டுக் கடன்கள் வாங்கும்போது வட்டியில் 20 புள்ளிகள் சலுகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்திவரும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சலுகை வீட்டுக் கடன் வாங்கு பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நவம்பர் 30 வரை வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படும். கடன் பெறும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் 750-க்குமேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப் படும். பண்டிகைக் காலத்தில் புதிய வீடு வாங்க விரும்புபவர்கள் ஹெச்.டி.எஃப்.சி வழங்கும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி வீட்டுக் கடன் பெறலாம்.

ஆர்.பி.எல் வங்கி & புக் மை ஷோ: புதிய கடன் அட்டை

திரைப்பட டிக்கெட் புக் செய்ய பயன்படும் புக் மை ஷோ நிறுவனத்துடன் ஆர்.பி.எல் வங்கி இணைந்து புதிதாக பிளே என்கிற கடன் அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த அட்டையைப் பயன்படுத்தி திரைப்பட டிக்கெட் புக் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டிக்கெட், கூடுதல் ரிவார்டு பாயின்டுகள் போன்ற பல்வேறு சலுகைகளை புக் மை ஷோ நிறுவனம் வழங்குகிறது.

வருடாந்தரக் கட்டணம் மிகக் குறைந்த அளவில் 500 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. திரைப்படப் பிரியர்கள் ஆர்.பி.எல் வங்கி அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.