Published:Updated:

தவணை முறையில் கார் வாங்க சிறப்பு சலுகை!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

தவணை முறையில் கார் வாங்க சிறப்பு சலுகை!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான திட்டங் களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (SBI Balanced Advantage Fund)

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யலாம். முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படாத காரணத்தால் இது சற்று ரிஸ்க் குறைவான திட்டம் ஆகும். பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

டாடா மோட்டார்ஸ்: குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் சுந்தரம் ஃபைனான்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வகையில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களுக்கு 100% கடன் தொகை வழங்கப்படும் என சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக கிசான் கார் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் சுலபத் தவணைகளில் வாடிக்கையாளர்கள் தமது கனவு கார் ஒன்றை வாங்க முடியும்.

தவணை முறையில் கார் வாங்க சிறப்பு சலுகை!

ஹெச்.டி.எஃப்.சி எர்கோ ஆப்டிமா செக்யூர் (HDFC Ergo Optima Secure)

ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் மருத்துவக் காப்பீடு வழங்கும் இந்தப் பிரத்யேகத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் நடப்பாண்டில் காப்பீட்டு க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை எனில், போனஸ் தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தில் காப்பீட்டு க்ளெய்ம் செய்தாலும் போனஸ் தொகை கிடைக்கும். மேலும், பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங் களில் கிளவுஸ், சிலவகை மருந்துகள், சில வகை மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கு க்ளெய்ம் கிடைக்காது. ஆனால், இந்தத் திட்டத்தில் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் காப்பீடு கிடைக்கும் என்பது சிறப்பான விஷயமாகும்.

கனரா ராபிகோ வேல்யூ ஃபண்ட் (Canara Rabeco Value Fund)

கனரா ராபிக்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் பிரத்யேகத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பங்குச் சந்தையில் சில காரணங்களால் நல்ல பங்குகள் உண்மையான மதிப்பைவிட அதிகமாக விலை வீழ்ச்சி அடையும். அது போன்ற பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஆயுஷ்மான் பாரத் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படும் சிறுவர், சிறுமியருக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை தடுப்பூசி செலுத்தப்படாத காரணத்தால் அதிகமாக சிறுவர், சிறுமியரைப் பாதிக்கும் என்று கருதப்படுவதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.