Published:Updated:

குழந்தைகள் முதல் முதியவர் வரை... புதிய இன்ஷூரன்ஸ் திட்டங்கள்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

குழந்தைகள் முதல் முதியவர் வரை... புதிய இன்ஷூரன்ஸ் திட்டங்கள்..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான சில திட்டங்களைப் பார்ப்போம்.

பரோடா பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Baroda Business Cycle Fund)

பரோடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பங்குச் சந்தையில் சில துறைகள் குறிப்பிட்ட காலத்துக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். சென்ற ஆண்டு பார்மா மற்றும் மெட்டல் துறை நிறுவனங்கள் நல்ல வருமானத் தைத் தந்தன. அதுபோல, பிசினஸ் சுழற்சியைக் கணித்து முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதி உள்ளது.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டத்திலிருந்து 10% முதலீட்டுக்குமேல் திரும்ப எடுத்தால் 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் தீமேட்டிக் திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையதாகும். அதனால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எஸ்.பி.ஐ: பிளாட்டினம் டெபாசிட் திட்டம்

நமது நாடு சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் எஸ்.பி.ஐ இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கை யாளர்கள் 75 நாள்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் என்று மூன்று தவணைகளில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டியானது பிற முதலீட்டு திட்டங்களில் வழங்கப்படும் வட்டியைவிட 0.15% அதிகமாக இருக்கும். அதனால் தேவை யுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

முத்தூட் ஃபைனான்ஸ்: மினி என்.சி.டி திட்டம் ஆகஸ்ட் 2021

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், இந்த புதிய என்.சி.டி (பங்குகளாக மாறாத கடன் பத்திரம்) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். திட்டக் காலம் ஆனது 16, 24, 42 மாதங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் தொகைக்கு 9.5% வரை வட்டித் தொகை வழங்கப்படும். வட்டித் தொகையை மாதம்தோறும் பெறும் வசதி உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் பெற விரும்புபவர்கள் இந்த என்.சி.டிஇ திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை... புதிய இன்ஷூரன்ஸ் திட்டங்கள்..!

எடெல்வைஸ் டோக்கியோ லைஃப் இன்ஷூரன்ஸ்: டோட்டல் புரொடக்ட் ப்ளஸ் திட்டம்

எடெல்வைஸ் டோக்கியோ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், டோட்டல் புரொடக்ட் ப்ளஸ் என்கிற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் திட்டமான சைல்டு லைஃப் புரொடக்ட் திட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு காப்பீடு எடுக்க முடியும். அந்தக் குழந்தை வளர்ந்து 25 வயது நிரம்புவதற்கு முன் அவரின் பெற்றோர் மரணமடைந்து விட்டால் காப்பீடு கிடைக்கும்.

இரண்டாவது திட்டமான லைஃப் லாங் புரொடக்ட் திட்டத்தில் ஒருவரின் 65 வயது வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படும். முதிர்வுத் தொகைக்குப் பிறகு, ஓய்வூதியமாக முதிர்வுத் தொகை பெறும் வசதியும் உள்ளது. ஆயுள் காப்பீடும் வேண்டும், முதலீடும் வேண்டும் என்பவர்கள் இந்தத் திட்டங்களில் சேர்ந்து பயன் பெறலாம்.

பி2பி கடன் வழங்கும் கிரட் நிறுவனம்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட கிரட் (CRED) நிறுவனம் தற்போது தமது கிரட் மின்ட் செயலி மூலம் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கடன் பெறுபவர்களையும், கடன் கொடுப்பவர்களையும் இணைக்கும் பி2பி (P2P) சேவைகளை இந்தப் புதிய செயலி மூலம் நிறுவனம் தற்போது வழங்க உள்ளது. இந்தச் செயலி மூலம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் வாடிக்கையாளர் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீடானது தகுதி வாய்ந்த 200 பேருக்கு பிரித்துக் கடனாகத் தரப்படும். இவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு 9% வரை வட்டி கிடைக்கும். கடன் தொகையானது பிரித்து முதலீடு செய்யப்படுவதால், பண இழப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. தற்போது வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி மிகக் குறைவாக உள்ளதால், குறைந்த அளவு ரிஸ்க் எடுக்கும் திறன் உடையவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.