நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

எல்&டி ஃபண்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியபின், ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கொண்டுவரும் முதல் திட்டம் இது!அண்மையில் சந்தை யில் புதிதாக வந்த நிதி சார்ந்த திட்டங்களில் சில வற்றை இங்கு பார்ப்போம்.

ஹெச்.எஸ்.பி.சி மல்ட்டிகேப் ஃபண்ட் (HSBC Multicap Fund)

ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் வகையில் மல்ட்டிகேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 24-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் அனைத்து வகை யான நிறுவனங்களிலும் கலந்து முதலீடு செய்யப் பட்டிருப்பதால், எல்லாக் காலத்துக்கும் ஏற்ற திட்டமாக மல்ட்டிகேப் ஃபண்ட் கருதப் படுகிறது.

மேலும், சென்ற நவம்பர் 2022-ல் ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எல் & டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருந்தது. அதன் பிறகு ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கொண்டுவரும் முதல் திட்டம் இது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதி பங்குச் சந்தை களில் முதலீடு செய்யப்படு வதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... புதிய ஃபண்ட் அறிமுகம்!

ஹெச்.டி.எஃப்.சி லாங் டியூரேஷன் ஃபண்ட் (HDFC Long Duration Fund)

ஹெச்.டி.எஃப்.சி மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம், ரிஸ்க் குறைவான கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 18-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி ஏழு ஆண்டுகள் வரை முதிர்வுக்காலம் கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். வட்டி விகிதங் கள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடன் பத்திரங் களில் செய்யும் முதலீடு அதிக வருமானம் தர வாய்ப் பிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் குறைந்தக்பட்சம் 100 ரூபாயி லிருந்து முதலீட்டை மேற் கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் மற்றும் வெளி யேறும் கட்டணங்கள் எதுவும் இந்தத் திட்டத்தில் கிடை யாது. குறைந்த ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப் பிருக்கிறது.

மிதமான ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இன்கிரீட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் வெளியிடும் புதிய என்.சி.டி திட்டம்...

இன்கிரீட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு அதிகபட்சமாக ரூ.350 கோடி நிதி திரட்ட இருக்கிறது.

இந்தக் கடன் பத்திரங்களின் முதிர்வுக்காலமாக 27 முதல் 39 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வகைகளில் முதலீட்டுக்காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 27-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். அதிகபட்சமாக இந்தத் திட்டத்தில் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைவான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்யும்பட்சத்தில், வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

இண்டஸ்இண்ட் வங்கி, பிரிட்டிஷ் & கத்தார் ஏர்வேஸ் தரும் புதிய கடன் அட்டை...

இண்டஸ்இண்ட் வங்கி, முன்னணி விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களான பிரிட்டிஷ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உடன் இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

ஏர்போர்ட்டுகளில் இலவச லவுஞ்ச் சேவை, ரிவார்டு பாயின்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு சலுகைகள், டிக்கெட் விலையில் கூடுதல் சலுகைகள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். விமானப் பயணங்கள் அதிகம் மேற்கொள்பவர்கள் இண்டஸ்இண்ட் வங்கி அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கடன் அட்டையை வாங்கிப் பயன் படுத்தலாம்.