சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகமான புதிய திட்டங்களில் சில...
ஹெச்.டி.எஃப்.சி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் (HDFC Banking and Financial Services Fund)
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பேங்கிங் மற்றும் ஃபைனான்ஷியல் துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் இந்தப் புதிய செக்டோரல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் ஜூன் 22 வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 என்ற அளவிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. பொதுவாக, செக்டோரல் ஃபண்டுகள் சற்று ரிஸ்க் அதிகமுடையதாகும்.
மேலும், இந்தத் திட்டம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா ஆக்ஸா ப்ளூசிப் ஃபண்ட் (Bank of India AXA Blue Chip Fund)
பேங்க் ஆஃப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். பெரிய புளூசிப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் ஜூன் 22-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.5,000 என்ற அளவிலிருந்து முதலீட்டை ஆரம்பிக் கலாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதிப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
வருமான வரித்துறை இணையதள முகவரி மாற்றம்...
வருமான வரி அலுவலகம், வருமான வரி செலுத்தும் இணைய தளத்தின் முகவரியை மாற்றியுள்ளது.
இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் http://incometaxoindiaefiling.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்து வந்தனர்.
தற்போது வருமானவரித் துறை அலுவலகம் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற புதிய இணைய தளத்தை ஜூன் 7 முதல் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இணையதளம் செயல்படத் தொடங்கியிருப்பதன் மூலம் வருமான வரிதாரர்கள் வரித் தாக்கலை எளிதாகச் செய்யும் நிலையை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 15 முதல் தங்க விற்பனைக்கு ஹால்மார்க் கட்டாயம்...
ஜூன் 15 முதல் தங்க விற்பனைக்கு ஹால் மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் நகைக் கடைகள் ஹால்மார்க் பொறிக்கப் பட்ட நகைகளை மட்டும் விற்பனை செய்ய முடியும்.
மேலும், நகைகள் 14, 18 மற்றும் 22 காரட் அளவுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
கடந்த ஆண்டிலேயே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கோவிட் ஊரடங்கு தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதால், இந்தத் திட்டம் இப்போது கொண்டு வரப் பட்டுள்ளது!