பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

குறைந்த பிரீமியத்தில் புதிய மருத்துவக் காப்பீடு!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் (SAMCO ELSS Tax Saver Fund)

சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங் களில் முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இ.எல்.எஸ்.எஸ் பிரிவில் நமது நாட்டில் அறிமுகம் செய்யப் பட்டுள்ள 40-வது திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 16 வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரி துறையின் செக்‌ஷன் 80சி-யின் படி, நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். இது குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்ட திட்டமாகும்.

பொதுவாக, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கங்கள் உடையவை ஆகும். மேலும், இதில் செய்யப்படும் முதலீடு முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

குறைந்த பிரீமியத்தில் புதிய 
மருத்துவக் காப்பீடு!

ஆக்ஸிஸ் நிஃப்டி எஸ்.டி.எல் செப்டம்பர் 2027 டெப்ட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Axis Nifty SDL September 2027 Debt Index Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குறைந்த ரிஸ்க் உடைய கடன் பத்திரங் களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 16-ம் தேதி வரை முதலீட்டை மேற் கொள்ள முடியும்.

பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குக் கிடைக்கும் வட்டியைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தகுதிவாய்ந்த முதலீட் டாளர்கள் ஆக்ஸிஸ் மியூச் சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

8.5% வட்டி வழங்கும் இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

கேரள மாநிலம் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்ட இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான டெபாசிட்டுக்கு 8.5% வட்டி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. பெரும்பாலான பிற வங்கிகளில் தரப்படும் வட்டி விகிதத்தைவிட இது சற்று அதிகம் ஆகும்.

இந்தத் திட்டத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். திட்ட காலமாக 999 நாள்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் அல்லாத இதர வாடிக்கையாளர் களின் டெபாசிட்டுக்கு 8% வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி கொடுக்கும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

குறைந்த பிரீமியத்தில் புதிய 
மருத்துவக் காப்பீடு!

ஹெல்த்தி ஷுர், மணிப்பால் சிக்னா: ஃப்ளெக்ஸி டாப்அப் மருத்துவக் காப்பீடு...

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதில் முன்னணி நிறுவன மான ஹெல்த்தி ஷுர் நிறுவனம் மணிப்பால் சிக்னா நிறுவனத்துடன் இணைந்து மருத்துவக் காப்பீட்டில் எளிதாக டாப்அப் செய்துகொள்ள உதவும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர் களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தை வழங்கி இருக்கும். அந்த அளவைக் காட்டிலும் கூடுதல் காப்பீட்டைக் குறைந்த பிரீமியத்தில் எளிதாக எடுக்கிற மாதிரி இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஊழியர்கள், தான் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிச் சென்றாலும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர முடியும்.

அதனால் தகுதி வாய்ந்தவர்கள் இந்த மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தால், இந்த டாப்அப் வசதியைப் பயன்படுத்தி கூடுதல் காப்பீடு பெறலாம்.