பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அதிக ரிஸ்க்... அதிக வருமானம்... புதிய திட்டங்கள் அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தைக் குப் புதிதாக வந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட்: மூன்று புதிய திட்டங்கள்...

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி குறியீடுகளில் முதலீடு செய்யும் மூன்று புதிய பேசிவ் வகை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. எடெல் வைஸ் நிஃப்டி மிட்கேப் 150 மொமென்டம் 50 இண் டெக்ஸ் ஃபண்ட் ஆகிய முதலாவது திட்டம் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

எடெல்வைஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற இரண்டாவது திட்டம் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எடெல்வைஸ் நிஃப்டி ஸ்மால்கேப் 250 இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற மூன்றாவது திட்டம் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களிலும் நவம்பர் 24-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டங் களில் முதலீட்டை நாம் மேற் கொள்ள முடியும். பேசிவ் வகை திட்டங்களில் நிர்வாகச் செலவு குறைவாக இருக்கும். என்றாலும், இந்தத் திட்டங் களில் திரட்டப்படும் நிதி யானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டங் களில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஒயிட் ஓக் லார்ஜ்கேப் ஃபண்ட் (White Oak Large cap Fund)

ஒயிட் ஓக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 25-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.

பெரிய நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளும் போது ஏற்றத்தாழ்வுகள் சற்றுக் குறைவாக இருக்கும். என்றாலும் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், இது சற்று ரிஸ்க் அதிகமான திட்டம் ஆகும். அதனால் மிதமான ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஹெச்டிஎஃப்சி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (HDFC Business Cycle Fund)

ஹெச்.டி.எஃப்.சி மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புதிய ஃபண்ட் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் ஆகும்.

பொதுவாக, தொழில்துறை விரிவாக்கம், உச்சம், சுருக்கம் மற்றும் சரிவு ஆகிய நான்கு படிநிலைகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் படிநிலைகள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மற்றும் அதன் சார்ந்த துறைகளுக்கும் மாறுபடும்.

உதாரணமாக, பொருளாதார மந்தநிலை கால கட்டத்தில் மெட்டல் துறை வீழ்ச்சி அடையும். இந்தப் படிநிலைகளைக் கணக்கிட்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்தத் திட்டத்தில் நவம்பர் 25-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழு வதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிகரித்து வரும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி...

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த நான்கு மாதங்களில் வட்டி விகிதங்களைக் கணிசமாக உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி தமது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

பந்தன் வங்கி புதிதாக 600 நாள்கள் முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி 555 நாள்கள் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக பட்சமாக 7.5% வட்டி நிர்ணயம் செய்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ள ஸ்டார் சூப்பர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில், 777 நாள்கள் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு அதிகபட்சமாக 7.75% நிர்ணயம் செய்துள்ளது.

நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தனக்குத் தோதான திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிக ரிஸ்க்... அதிக வருமானம்... புதிய திட்டங்கள் அறிமுகம்!