Published:Updated:

தங்க நகை அடமானம்... பாதுகாப்புக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி! புதிய அறிமுகம்

தங்க நகை
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க நகை

N E W S C H E M E S

அண்மையில் புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் நிதித் திட்டங்களில் சில...

எடெல்வைஸ் ஸ்விட்ச்!

எடெல்வைஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் புதிதாக எடெல்வைஸ் ஸ்விட்ச்’ என்ற மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் போல இல்லாமல், வாகனம் ஓட்டும்போது மட்டும் இன்ஷூரன்ஸ் பாலிசியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் ஆப்ஷனுடன் வந்திருக்கிறது.

வழக்கமாக, வாகனங்களுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் எடுத்து விட்டால், அதற்கு வருட பிரீமியத்தை செலுத்தவேண்டும். ஆனால், இதில் இருக்கும் ஸ்விட்ச் ஆன், ஸ்விட்ச் ஆஃப் ஆப்ஷன் மூலம் தேவைப்படும் போது மட்டும் பாலிசியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கொரோனாவால் வீட்டிலிருந்தே பலரும் வேலை பார்த்து வருவதால் வாகனப் பயன்பாடு குறைந்துள்ளது. அது போன்றவர் களுக்கு பயன்படும் விதமாக இந்த பாலிசி வந்திருக்கிறது.

இதற்கான பிரீமியம் வாகனம் ஓட்டுபவர்களின் வயது, அவரின் பயண அனுபவ அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஸ்விட்ச் ஆன் ஆப்ஷனில் இருக்கும்போது ஏதாவது அசம்பா விதம் நடந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். ஆஃப் ஆப்ஷனில் இருக்கும்போது க்ளெய்ம் செய்ய முடியாது.

ஆட்டோ சேஃப்...

டாடா ஏ.ஐ.ஜி அறிமுகப்படுத்திய இந்த பாலிசியை எடுத்துக் கொள்பவர் களுக்கு ஆட்டோ சேஃப் சாதனம் வழங்கப்படுகிறது. இதை எப்போதும் காருடன் இணைத்து வைத்திருப்பது அவசியம். வாகனம் பயணிக்கும் தூரம், வாகனத்தின் ஆயுள் காலம், ஓட்டுநர் வாகனத்தை இயக்கும் முறை என அனைத்து விஷயங்களை யும் இந்த டிவைஸ் பதிவு செய்கிறது. பாலிசி காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், டிவைஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இந்த டிவைஸ் மோஷன் சென்சார் மூலம் இயங்குகிறது. பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றையும் கணக்கிடும். 2,500 கி.மீ, 5,000 கி.மீ, 7,500 கி.மீ, 10,000 கி.மீ, 15,000 கி.மீ மற்றும் 20,000 கி.மீ என ஓட்டுகிற தூரத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு பாலிசியை எடுத்துக் கொள்ளும் ஆப்ஷனும் ஆட்டோ சேஃப் பாலிசியில் இருக்கிறது. வாகனம் ஓட்டிக்கொண் டிருக்கும்போது இன்னும் கூடுதல் கி.மீ-க்கு பாலிசியை எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு டாப்-அப் ஆப்ஷனும் இருக்கிறது. ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளருக்கும் சேர்த்து பாலிசி கவரேஜ் ரூ.15 லட்சம்.

தங்க நகை
தங்க நகை

ஹாஸ்பி கேர் பாலிசி

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘ஹாஸ்பி கேர் பாலிசி’ (Hospi Care policy) என்ற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியின் மூலம் 150-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக் கான செலவுகளை க்ளெய்ம் செய்து கொள்ளலாம். 140-க்கும் மேற்பட்ட தினசரி மருத்துவச் செலவினங் களுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். டெங்கு, மலேரியா, சிக்குன்கினியா போன்ற வியாதிகளுக்கான மருத்துவ செலவுகளையும் இந்த பாலிசியின் மூலம் க்ளெய்ம் பெற முடியும்.

முத்தூட் கோல்டு ஷீல்டு!

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘முத்தூட் கோல்டு ஷீல்டு’ என்கிற ஜுவல்லரி இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைக்கும் தங்க நகை களுக்கு, இன்ஷூரன்ஸ் செய்து கொள்ள நினைப்பவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: இங்கே சந்தைக்குப் புதிதாக வந்த நிதித் திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது. இது பரிந்துரை அல்ல.