அண்மையில் புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் முதலீட்டுத் திட்டங்களில் சில...

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்!

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘நிப்பான் இந்தியா அஸெட் அலொகேட்டர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்’ (Nippon India Asset Allocator FoF) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இதில் திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங் களிலும் கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது. முதலீடு ஆரம்பித்து 12 மாதங்களுக்குள் வெளி யேறினால், 1% வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது. எனவே, அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.

பேலன்ஸ்ட்டு அட்வான்டேஜ் ஃபண்ட்!

பி.ஜி.ஐ.எம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘பி.ஜி.ஐ.எம் இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’ (PGIM India Balanced Advantage Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இந்த ஃபண்டில் முதலீடு நுழைவுக் கட்டணம் கிடையாது. இதில் முதலீடு செய்ததில் 10 சதவிகிதத்துக்குள் பணத்தை 90 நாள்களுக்குள் வெளியில் எடுத்தால், வெளியேறும் கட்டணம் கிடையாது. 10 சதவிகிதத்துக்கு மேற்பட்ட தொகையை எடுத்தால் வெளியேறும் கட்டணம் 0.50% உண்டு. 90 நாள்களுக்குப் பிறகு, வெளி யேறினால் கட்டணம் எதுவும் இல்லை. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் சராசரியான ரிஸ்க் கொண்டது என்பதால், அனைத்து வயதினர்களும் முதலீடு செய்யலாம்.

ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் ஃபண்ட்!

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘எஸ்.பி.ஐ ரிட்டையர் மென்ட் பெனிஃபிட் ஃபண்ட்’ (SBI Retirement Benefit Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபா யிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப் பிக்க முடியும்.

வெளிநாட்டு ஈக்விட்டிகள், கோல்டு இ.டி.எஃப் மற்றும் ரெய்ட் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. லாக்-இன் பீரியடு 5 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் எஸ்.ஐ.பி ஆரம்பித்த நாள் முதல் ரூ.50 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும். ஓய்வுக்காலத் தேவைக்கு முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து வயதினரும் இதில் முதலீடு செய்யலாம்.

டெப்ட் ஃபண்ட்!

டிரஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘டிரஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் பேங்கிங் அண்டு பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்ட்’ (Trust MF Banking & PSU Debt Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

இந்தப் புதிய வெளியீட்டுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் சராசரியான ரிஸ்க் கொண்டது என்பதால், அனைத்து வயதினரும் முதலீடு செய்யலாம்!