Published:Updated:

என். எஃப்.ஓ நிறுத்தி வைப்பு... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

என். எஃப்.ஓ நிறுத்தி வைப்பு... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

புதிய மியூச்சுவல் ஃபண்ட் வெளியிடுவதை (New Fund Offer - NFO) இந்த ஏப்ரல் தொடங்கி மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் சொல்லியிருக்கிறது செபி. ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறது?

ஹசன் அலி 
நிறுவனர், 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர், Siptiger.com

எக்கச்சக்கமாக வந்த முதலீடு...

கடந்த 2021-22-ம் நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் என்.எஃப்.ஓ மூலம் ரூ.94,621 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் ரூ.42,018 கோடிதான் முதலீடானது. தவிர, கடந்த நிதி ஆண்டில் மொத்தம் சுமார் 145 புதிய ஃபண்டுகள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிதி திரட்டின. முந்தைய நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 85 என்.எஃப்.ஓ வந்தன.

முந்தைய நிதி ஆண்டில் (2020-21) பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் என்.எஃப்.ஓ மூலம் ரூ.37,980 கோடி திரட்டப்பட்ட நிலையில் முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.86,650 கோடி திரட்டப்படுள்ளது. கடன் ஃபண்ட் என்.எஃப்.ஓ-கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.4,058 கோடியிலிருந்து ரூ.8,061 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் மல்ட்டிகேப் ஃபண்ட் மூலம் முறையே ரூ.14,500 மற்றும் ரூ.8,200 கோடி திரட்டியது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் மூலம் ரூ.9.500 கோடி திரட்டியது. வட்டி விகிதம் அதிகரிக்கும் என்கிற நிலையில், 24 ஃபிக்ஸட் டேர்ம் ஃபண்டுகள் என்.எஃப்.ஓ மூலம் மொத்தம் ரூ.4,387 கோடி (முந்தைய ஆண்டில் ரூ.1,176 கோடி) திரட்டியது.

தவிர, வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் குளோபல் ஃபண்டுகள், இலக்கு சார்ந்த ஃபண்டுகள், ரிஸ்க்கை பரவலாக்கும் மல்ட்டிகேப் ஃபண்டுகள் மற்றும் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், செலவு குறைவான மற்றும் விதிமுறை சார்ந்த பேசிவ் ஃபண்டுகள் ஆகிய ஃபண்ட் பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் என்.எஃப்.ஓ-கள் வந்துள்ளன.

என். எஃப்.ஓ நிறுத்தி வைப்பு... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

என்.எஃப்.ஓ-வுக்கு ஜூலை வரை தடை...

இந்த நிலையில், 2022 ஜூலை மாதம் வரைக்கும் புதிய ஃபண்டுகளை வெளியிட இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப் படுத்தும் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

புதிய நிதி ஆண்டில் (2022-23) சுமார் 20 புதிய ஃபண்டுகளை வெளியிட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திட்ட மிட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை, கடன் சார்ந்த ஃபண்டுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) ஆகும். செபியின் தடையால் இவை தள்ளிப்போயிருக்கின்றன.

செபியின் தடைக்கு என்ன காரணம்?

புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள், ஆன்லைன் புரோக்கர்கள் அல்லது பங்குச் சந்தை புரோக்கர்கள் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். என்.எஃப்.ஓ காலமான 15 நாள்களுக்கு இந்தப் பணம் இந்த நிறுவனங்களின் தொகுப்பு நிதியில் இருக்கின்றன. கடைசி நாள் அன்றுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கணக்குக்கு இந்தப் பணம் மாற்றப்படும்.

இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகத் தொகுப்பு நிதியில் மாற்றம் கொண்டுவர செபி திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தேவையான புதிய விதிமுறைகளை வகுக்க மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு உத்தரவிட்டுள்ளது செபி.

முதலீட்டாளர்கள் கவலைபடத் தேவையில்லை...

புதிய ஃபண்ட் திட்டங்கள் வெளியிடப்படுவதை செபி நிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்து ஃபண்ட் முதலீட் டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. புதிதாக முதலீடு செய்ய விரும்பும் முதலீ்ட்டாளர்கள் என்.எஃப். ஓ-வில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தற்போது செயல்பாட்டில் இருக்கும் நல்ல திட்டத்தில் முதலீடு செய்தாலே நீண்ட காலத்தில் லாபம் காண முடியும் என்கிற போது, என்.எஃப்.ஓ-வில் ஏன் பணம் போட வேண்டும்?

என்.எஃப்.ஓ-வில் ஒரு யூனிட் ரூ.10-க்குக் கிடைக்கிறது. இதனால் அதிக யூனிட் கிடைக் கும் என்பதற்காகச் சிலர் அதில் முதலீடு செய்கிறார்கள். ஒரு திட்டத்தில் எவ்வளவு யூனிட் கிடைக்கிறது என்பதைவிட திட்டத்தின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது எனப் பார்க்க வேண்டியது அவசியம். எனவே, செபியின் இந்தத் தடை குறித்து கவலை வேண்டாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism