Published:Updated:

என்.பி.எஸ் பென்ஷன் திட்டம்... கவனிக்க வேண்டிய புதிய மாற்றங்கள்..!

என்.பி.எஸ்

பிரீமியம் ஸ்டோரி

சசி ரேகா

பென்ஷன் திட்டங்களில் முதன்மையான திட்டம் எது என்று கேட்டால், என்.பி.எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (National Pension System) திட்டத்தைத் தாராளமாகக் குறிப்பிடலாம். இந்தத் திட்டத்தில் லேட்டஸ்ட்டாகப் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

முதலாவதாக, இந்தத் திட்டத்தின் உச்சபட்ச வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டத்தில் 18 முதல் 70 வயது நிரம்பியவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், இந்தத் திட்டத்திலிருந்து வயது காரணமாகப் பாதியில் விலகியவர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவும் முடியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தவிர, பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் விகிதாச்சார அளவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 வயதில் சேரும் முதலீட்டாளர்கள் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கு 75 வயது கடந்து இருக்க வேண்டும்.

என்.பி.எஸ் பென்ஷன் திட்டம்...
கவனிக்க வேண்டிய புதிய மாற்றங்கள்..!

முதலீட்டுத் தொகையில் 60% பணமாகவும் மீதமுள்ள தொகையை மாதாந்தர பென்ஷனாகவும் பெற்றுக் கொள்ள முடியும். முதலீட்டுத் தொகை 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், முழுத் தொகையையும் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும் கொடுக்கப் பட்டுள்ளது. முன்பு இது ரூ.2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்.பி.எஸ் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் முதலீட்டுக்கு மிக மிகக் குறைந்த அளவு மட்டுமே நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால், பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல வருமானம் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு