Published:Updated:

`இனி NPS முதலீட்டை 4 முறை மாற்றலாம்!' - புதிய அறிவிப்பால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

பென்ஷன்
News
பென்ஷன்

புது அறிவிப்பின்படி, சந்தையின் மாறுதல்களுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நிஃப்டி- 50 அடுத்த முறை 10% குறைந்து வர்த்தகமாகிறது எனில் என்பிஎஸ் சந்தாதாரர்கள் தங்களின் பங்கு முதலீட்டு ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள முடியும்.

என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து புத்தாண்டை ஒட்டி நல்ல செய்தி வந்திருக்கிறது. அதாவது, என்.பி.எஸ் சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அதிலிருக்கும் முதலீட்டு ஒதுக்கிட்டை ஆண்டுக்கு நான்கு முறை மாற்றிக்கொள்ளும் வகையில் விதிகளைத் தளர்த்தியுள்ளது. ஏற்கெனவே ஆண்டுக்கு இரண்டு முறை முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ளலாம் என்ற விதியை நான்கு முறையாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்த்யோபத்யாய்.

அசோசம் அமைப்பு ஒருங்கிணைத்த `கார்ப்பரேட்டுகளுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுப்ரதிம் பந்த்யோபத்யாய் பேசும்போது, ``இந்தியாவில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதி ரூ.6.8 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது ஆண்டுக்கு 30 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது.

NPS
NPS

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை என்.பி.எஸ் திட்டத்தில் சேர்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதுவரை 9,600 நிறுவனங்கள் என்.பி.எஸ் திட்டத்தில் பதிவுசெய்துள்ளன. 13 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் என்.பி.எஸ் திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து பொருளாதாரத்திலும், நிதிச் சந்தையிலும் பல்வேறு காரணங்களால் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் முதலீடுகளிலும் எதிரொலிக்கின்றன.

எனவே, என்.பி.எஸ் சந்தாதாரர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பேரில் ஒதுக்கீட்டை மாற்றும் வசதியை இரண்டிலிருந்து நான்காக உயர்த்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது" என்று கூறினார். முக்கியமாக, கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டை மாற்றும் வசதி முற்றிலும் இலவசம் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்பிஎஸ்
என்பிஎஸ்
NPS

இதன்மூலம் சந்தையின் மாறுதல்களுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நிஃப்டி 50 அடுத்த முறை 10% குறைந்து வர்த்தகமாகிறது எனில், என்பிஎஸ் சந்தாதாரர்கள் தங்களின் பங்கு முதலீட்டு ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள முடியும். இதன்மூலம் தங்களுடைய முதலீட்டின் மீதான வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் சந்தாதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டைக் கடன் திட்டங்களில், கடன் பத்திரங்களில்
உயர்த்திக் கொள்ளலாம்.

பொதுவாகவே, என்.பி.எஸ் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்டுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், என்.பி.எஸ் முதலீடு வளமான ஓய்வுக்காலத்துக்கான முதலீடாகும். எனவே, என்பிஎஸ் முதலீட்டை சந்தாதாரர்கள் மியூச்சுவல் ஃபண்ட் போல நினைக்காமல், இந்த முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றும் வசதிகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.