Published:Updated:

எதிர்ப்பு அலையில் என்.பி.எஸ்... மீண்டும் வருமா ஓ.பி.எஸ்..?

என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்

என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்

எதிர்ப்பு அலையில் என்.பி.எஸ்... மீண்டும் வருமா ஓ.பி.எஸ்..?

என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்

Published:Updated:
என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
என்.பி.எஸ் - ஓ.பி.எஸ்

வருகிற 27-ம் தேதி அன்று 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளார்கள். அவர்களது ஐந்து அம்சக் கோரிக்கையில் முக்கியமான ஒன்று, என்.பி.எஸ் (National Pension Scheme) நீக்கப்பட்டு ஓ.பி.எஸ் (Old Pension Scheme) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது.

14 லட்சம் மத்திய, மாநில ஊழியர்கள் சேர்ந்து என்.எம். ஓ.பி.எஸ். (National Movement for Old Pension Scheme) என்ற அமைப்பை நிறுவி, என்.பி.எஸ் பற்றிய தங்கள் கண்டனத்தை நிதியமைச் சருக்குத் தெரிவித்துள்ளனர்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

குஜராத்தில் அஹமதாபாத், சூரத், ராஜ்கோட், வடோதரா போன்ற இடங்களில் பல அரசுத்துறை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து என்.பி.எஸ் தேவையில்லை என்று இரண்டு நாள் போராடி னார்கள். அங்குள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிவது, சற்று முன்னதாகப் பள்ளிக்கு வந்து இரண்டு நிமிட மௌனம் அனுஷ்டிப்பது, பேனர்கள் வைப்பது, கலெக்டர்களிடம் மனு தருவது போன்ற போராட்ட முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2004-ல் வாஜ்பாய் தலைமையில் நடந்த பி.ஜே.பி அரசு கொண்டு வந்த என்.பி. எஸ் திட்டத்துக்கு இப்போது ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

எதிர்ப்பு  அலையில் என்.பி.எஸ்... மீண்டும்  வருமா  ஓ.பி.எஸ்..?

ஓ.பி.எஸ் Vs என்.பி.எஸ்

பழைய பென்ஷன் முறையில் பென்ஷனருக்கு, அவருக்குப் பின் அவரின் வாழ்க்கைத் துணைக்கு, அவருக்குப் பின் அவரை முழுவதுமாகச் சார்ந்திருக்கும் உறவினருக்கு என்று பல ஆண்டுகளுக்கு பென்ஷன் தர வேண்டியிருந்தது. இது அரசின் பெரிய செலவுகளில் ஒன்றாக இடம்பிடிக்க ஆரம்பித்தது. அதைத் தவிர்க்கவும், பங்குச் சந்தை யின் ஆழத்தை அதிகப்படுத்த வும் என்.பி.எஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் பென்ஷன் வழங்கும் சுமை அரசின் தோள்களிலிருந்து ஆனியுட்டி வழங்கும் நிறுவனங்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டது. பென்ஷன் தொடர்பாக அரசிடம் இருந்த மொத்தப் பணமும் ஆனியுட்டி நிறுவ னங்களுக்குக் தரப்பட்ட துடன், மாதம்தோறும் ஊழிய ரின் சம்பளத்தில் மேற்கொள் ளப்படும் 10% (பேசிக் + டி.ஏ) பிடித்தமும், அரசு அதற்கு இணையாக வழங்கும் 10% தொகையும் ஆனியுட்டி நிறுவனங்களுக்கே செல்கிறது.

இதில் அரசு தன் பங்களிப்பை 01.04.2019-ல் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. மேலும், வழக்கமான ரூ.1.50 லட்சம் (80சி) வரிவிலக்குடன் என்.பி.எஸ் டயர் 1 முதலீட்டில் ரூ.50,000-க்கு அதிகப்படியான வரிவிலக்கு கொடுக்கப்படு கிறது. ஆனாலும், மக்களின் அதிருப்தி அதிகரிப்பதன் காரணம் என்ன?

எதிர்ப்பு ஏன்?

பழைய பென்ஷன் முறையில் கடைசி 10 மாதங் களில் வழங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் பென்ஷன் கணக்கிடப்பட்டதால், குறைந்தபட்ச உத்தரவாத பென்ஷனாக ரூ.9,000 கிடைத்துவந்தது. இந்தக் குறைந்தபட்ச உத்தரவாதம் என்.பி.எஸ்ஸில் இல்லை. ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் டி.ஏ ஏற்றமும் இல்லை. சந்தை சார்ந்து இயங்குவதால், நிலையான போக்கும் இல்லை.

கேள்விகள், மன உளைச்சல், கவலை...

மூத்த குடிமக்களின் கசப்பான அனுபவங்களால் தான் இந்தப் போராட்டம் வலுத்து வருகிறது. சி.ஏ.ஜி-யும் (Comptroller And Auditor General of India Report No. 13 of 20), நேஷனல் ஜுடிஷியல் பே கமிஷனும் “என்.பி.எஸ் திட்டமானது ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு உத்தரவாதமான சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைத் தருகிறதா” என்று கேள்வியை எழுப்பி யுள்ளன. ஊழியர்களின் கடின உழைப்பில் விளைந்த பணம், என்.பி.எஸ் முறையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது. இது வயது முதிர்ந்த பென்ஷனர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், வேறு வழியின்றி என்.பி.எஸ்ஸில் உறுப்பினராக இருக்கும் 75 லட்சம் குடும்பங்களுக்கும் கவலையை விளைவிக்கிறது.

ராஜஸ்தான் அரசு பழைய பென்ஷன் முறையைக் கொண்டு வந்துவிட்டதால் மற்ற மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது. இதனால் 18 வருடங்களாக வேறூன்றிவிட்ட என்.பி.எஸ் முறையைப் போராட் டங்கள் மூலம் மாற்ற வங்கி யூனியன்கள் போன்ற மக்கள் இயக்கங்கள் முயன்று வருகின்றன.

இந்தப் போராட்டம் ஒரு பக்கம் இருக்க, ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிப்பது எப்படி என்கிற கவலை அனைவருக்கும் அதிகரித்து வருகிறது. மாறி வரும் பொருளாதாரச் சூழல் இந்தக் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஓய்வுக்கால சேமிப்பு அல்லது முதலீடு குறித்து இளம் வயதிலேயே திட்டமிட்டுச் செயல்படுவதன்மூலமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism