Published:Updated:

Paytm IPO: இந்தியாவின் மிகப்பெரிய IPO-வான இதில் முதலீடு செய்யலாமா?

கடந்த 2010-ம் ஆண்டு `கோல் இந்தியா' நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐ.பி.ஓ இதுதான். தற்போது பேடிஎம் சுமார் ரூ.18,300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதால். இது மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாகப் பார்க்கப்படுகிறது.

`டிஜிட்டல் இந்தியா', `கேஷ்லெஸ் பணப் பரிவர்த்தனை' என்கிற வாசகங்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகவே மாறிவிட்ட காலகட்டம் இது. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக நிதித் துறையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் கேஷ்லெஸ் பணப் பரிவர்த்தனையில், மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது டிஜிட்டல் பேமென்ட் தளமான பேடிஎம்.

இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் `ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்த நிலையில், அண்மையில் செபி அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பேடிஎம் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறது.

ரூ.18,300 கோடி நிதி திரட்டுகிறது!

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ
Paytm IPO: ₹16,600 கோடி திரட்டப்போகும் பேடிஎம்; பங்குச்சந்தையின் மிகப்பெரிய IPO-வாக மாறுமா?

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் 18,300 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே நிர்ணயித்த ரூ.16,600 கோடி இலக்கிலிருந்து ரூ.1,700 கோடியைத் தற்போது பேடிஎம் அதிகப்படுத்தியிருக்கிறது. பங்கு விலைப்பட்டை ரூ.2,080 - ரூ.2,150. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.8,300 கோடி ரூபாயும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.10,000 கோடி ரூபாயும் திரட்டப்படுகிறது.

இந்த நிதியானது வணிகத்தை மேம்படுத்துவதற்காகவும், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், நிதிச் சேவையை இன்னும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது தவிர, புதிய வணிக முயற்சிகள், கையகப்படுத்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு `கோல் இந்தியா' நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐ.பி.ஓ இதுதான். தற்போது பேடிஎம் சுமார் ரூ.18,300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதால். இது மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாகப் பார்க்கப்படுகிறது.

Paytm
Paytm
IPO திருவிழா... முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! | Startup IPO | Nanayam Vikatan

குறைந்தபட்ச முதலீடு?

இந்த ஐ.பி.ஓ.வில் ஆறு பங்குகள் சேர்ந்தது ஒரு லாட் ஆகும். ஒரு முதலீட்டாளர் அதிகமான பங்குகளை வாங்க வேண்டுமெனில், 6-ன் மடங்கில்தான் வாங்க வேண்டியிருக்கும். ஆக, ஒரு லாட் வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 12,900 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் அதிகபட்சம் 15 லாட்கள் அல்லது 1,93,500 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த பங்கு வெளியீட்டில் 75% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 15% நிறுவனமல்லாத முதலீட்டாளார்களுக்கும், மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளார்களுக்கும் விற்பனை செய்யப்படும் பேடிஎம் எனத் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீடு செய்யலாமா?

பேடிஎம் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாமா என பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

``டிஜிட்டல் பேமென்ட் தளத்தில் முதன்முதலாகக் கால்பதித்த நிறுவனம் பேடிஎம். இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடல் நன்றாக உள்ளது. அதனால் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளாமல் இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாம்.

மேலும், ஒரு டிஜிட்டல் பேமென்ட் நிறுவனம் பேமென்ட் பேங்க் உட்பட இன்வெஸ்ட்மன்ட் சர்வீசஸ் என அனைத்தையும் ஒருசேர வழங்குவது இதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

அதுமட்டுமல்லாமல், தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள மற்றும் அதிகப்படுத்த தொடர்ந்து புதிய புதிய ஆஃபர்களை பேடிஎம் வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதன்படி, வாடிக்கையாளர் சேவையை இந்த நிறுவனம் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பேமென்ட் தளங்களின் புழக்கமும், பயன்பாடும் இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஐ.பி.ஓ-வில் நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்" என்றார் தெளிவாக.

பேடிஎம் ஐ.பி.ஓ-வில் வருகிற 10-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த நிறுவனப் பங்கானது, பங்குச் சந்தையில் நவம்பர் 18-ம் தேதி பட்டியலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ இன்று ஆரம்பமான நிலையில், முதல் நாளன்றே மொத்த முதலீட்டில் 16% அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், சிறு முதலீட்டாளர் பிரிவில் 66% அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய இன்னும் இரு நாள்கள் இருப்பதால், எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீட்டாளர்கள் பங்கு வேண்டி விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு