Published:Updated:

அஞ்சலக டெபாசிட்... வட்டியைத் தருவதில் ஏன் இத்தனை அலட்சியம்?

அஞ்சலக டெபாசிட்...
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலக டெபாசிட்...

அஞ்சலக டெபாசிட்

அஞ்சலக டெபாசிட்... வட்டியைத் தருவதில் ஏன் இத்தனை அலட்சியம்?

அஞ்சலக டெபாசிட்

Published:Updated:
அஞ்சலக டெபாசிட்...
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலக டெபாசிட்...

ஆகாஷ்

அரசு நிறுவனம் என்பதால், அஞ்சலகத் துறை மீது நம் மக்கள் நிறையவே நம்பிக்கை வைத்திருக்கின்றனர். தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதைவிட, அஞ்சலகங்களைத் தேடிவந்து டெபாசிட் செய்கின்றனர். வங்கிகளைவிட ஓரளவுக்கு அதிக வட்டி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருப்பது எனப் சில செளகரியங்கள் அஞ்சலகங்களில் டெபாசிட் செய்வதில் உள்ளன. அதே சமயம், வட்டியை டெபாசிட்தாரரின் கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அஞ்சல் துறை கடைப்பிடிக்கும் நடைமுறைகள் ஹைதர் காலத்து பழைமையானதாக இருக்கிறது.

2019-ல் சென்னையில் உள்ள அஞ்சல் கிளை ஒன்றில் ரூ.5,00,000 டெபாசிட் செய்தார் முதலீட்டாளர் ஒருவர். இந்த டெபாசிட்டுக்கான வட்டியானது 2020 டிசம்பர் மாதம் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தக் கணக்கில் வரவு வைப்பது என்று சொல்ல வில்லை என்ற காரணத்தைக் காட்டி, வட்டியைத் தராமலே இருந்தது அஞ்சலகக் கிளை. கோவிட் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்ததால், டெபாசிட்தார ராலும் டெபாசிட் செய்த அஞ்சல் கிளைக்குச் சென்று விசாரிக்க முடியவில்லை. நிலைமை சீரடைந்ததும் அந்த அஞ்சல் கிளைக்குச் சென்று அதிகாரிகளிடம் கேட்ட பிறகு, இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய வங்கிக் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அஞ்சலக அதிகாரியிடம் புகார் செய்தார் அந்த டெபாசிட்தாரர். ‘‘உரிய நேரத்தில் வட்டிப் பணம் என் கணக்கில் வரவு வைத்திருந்தால், அதை நான் வேறு எங்காவது முதலீடு செய்திருப்பேன். ஆனால், ஆறு மாதம் கழித்து வட்டிப் பணம் தந்து, இழப்பை ஏற்படுத்திவிட்டீர்களே!’’ என அஞ்சலக அதிகாரிகளிடம் அந்த டெபாசிட் தாரர் கேட்க,

‘‘வட்டிப் பணத்தை எந்தக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை. அதை நீங்கள் சொல்லி யிருந்தால், வட்டியை உரிய நேரத்தில் உங்கள் கணக்கில் வரவு வைத்திருப்போம்’’ என்று வாதம் செய்திருக்கிறார்கள் அஞ்சல் துறை அதிகாரிகள்.

அஞ்சலக டெபாசிட்... வட்டியைத் தருவதில் ஏன் இத்தனை அலட்சியம்?

ஆனால், அஞ்சலகத்தில் அந்த டெபாசிட் தாரர் பணத்தை டெபாசிட் செய்யும்போது, இந்தப் பணம் எப்படி வந்தது என்பது உட்பட பல கேள்விகளைக் கேட்கிறார்கள். வங்கி பாஸ்புக், என் விலாசம், போன் நம்பர் என எல்லாவற்றையும் கேட்டு வாங்குகிறார்கள். இப்படி எல்லாக் கேள்விகளையும் கேட்டவர்கள், வட்டியை எந்தக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்கவில்லை. இந்தக் கேள்விக்கு டெபாசிட் தாரர் பதில் சொல்லவில்லை என்றாலும், அவரிடம் அதற்கான பதிலைக் கேட்டு வாங்குவது அஞ்சல் துறை ஊழியரின் வேலை? அதைச் செய்யாமல், டெபாசிட்தாரர் மீது பழிபோடுவது அஞ்சல் துறைக்கு அழகா?

‘‘இது தொழில்நுட்ப யுகம். எல்லோரிடமும் போன் இருக்கிறது. எனக்கு ஒரு போன் செய்து கேட்டிருக் கலாம். எஸ்.எம்.எஸ் அனுப் பியிருக்கலாம். என் விலாசத் துக்கு ஒரு கடிதமாவது எழுதிக் கேட்டிருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல், டெபாசிட்தாரருக்கு நியாய மாகக் கிடைக்க வேண்டிய வட்டிப் பணத்தை நிறுத்தி வைப்பது சரியா? கொரோனா காலத்தில் இது மாதிரி எத்தனை பேருக்கு நடந்து, அவர்கள் வட்டிப் பணம் கிடைக்காமல் தவித்தார்களோ?

அது மட்டுமல்ல, இன்றைக்கு பொதுத்துறை வங்கிகளாகட்டும், தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷன் ஆகட்டும் அல்லது சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களாட்டும், நம் டெபாசிட் தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஆன்லைனிலேயே பார்க்க முடிகிறது. ஆனால், அஞ்சலக டெபாசிட்டில் வட்டி வரவு வைத்திருக்கிறார்களா என்பதை பாஸ்புக் எடுத்துக்கொண்டு போய் பதிந்தால்தான் தெரியும்.

அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் டெபாசிட் தொடர்பான அத்தனை விவரங்களையும் ஆன்லைனிலேயே தரும்போது, மத்திய அரசின் மிகப்பெரும் நிறுவனமான அஞ்சல் துறையால் ஆன்லைன்மூலம் டெபாசிட்தாரர்களுக்கு சேவை அளிக்க முடியாதா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விஷயத்தில் தலையிட்டு, அஞ்சல் துறை மூலம் சாதாரண டெபாசிட்தாரர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார் அந்த டெபாசிட்தாரர்.

அவர் கோரிக்கை நியாயம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism