Published:Updated:

பி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

பி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியை மிச்சப்படுத்த பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்), பங்குச் சந்தை சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறோம்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
www.vbuildwealth.com
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், www.vbuildwealth.com

இதில் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்களின் முக்கிய விருப்பமாக பி.பி.எஃப் இருக்கிறது. ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களின் பிரதான விருப்பமாக இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் உள்ளது. காரணம், இந்த ஃபண்ட், பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் தந்துவருவதே!

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 2021 ஆகஸ்ட் 27 வரையிலான 15 ஆண்டுக் காலத்தில் பி.பி.எஃப் சராசரியாக சுமார் 8% வருமானம் தந்துள்ளது. (பார்க்க அட்டவணை 1) அதே நேரத்தில், டாப் டாக்ஸ் சேவர் ஃபண்டான குவான்ட் டாக்ஸ் பிளான் ஆண்டுக்கு சராசரியாக 16.33% வருமானம் தந்துள்ளது. இதுவே மிகக் குறைவான வருமானம் தந்த ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்டின் சராசரி ஆண்டு வருமானம் 12.40% ஆகும். (பார்க்க அட்டவணை 2)

ஒருவர் மாதம் ரூ.12,500 வீதம் ஆண்டுக்கு வரிச் சலுகை வரம்பான ரூ.1.5 லட்சத்தை பி.பி.எஃப் அல்லது இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்தம் ரூ.22.50 லட்சம் முதலீடு செய்திருப்பார். 15 ஆண்டுகள் கழித்து, பி.பி.எஃப் மூலமான முதலீடு ரூ.43.54 லட்சமாக அதிகரித்திருக்கும். அதாவது, வட்டி வருமானமாக மட்டும் ரூ.21.04 லட்சம் கிடைத்திருக்கும். இதுவே டாப் டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அது பி.பி.எஃப் முதலீட்டைவிட இரு மடங்கு அதிகமாக அதாவது, ரூ.86.5 லட்சமாக அதிகரித்திருக்கும். இங்கே வருமானமாக ரூ.64 லட்சம் கிடைத்திருக்கும். இதுவே மிகக் குறைவான வருமானம் கொடுத்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால்கூட ரூ.61.6 லட்சமாக அதிகரித்திருக்கும். இங்கே வருமானம் என்பது ரூ.39.10 லட்சம் ஆகும்.

பி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

பலரும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டைத் தவிர்த்து பி.பிஎஃப் ஃபண்டில் வரிச் சலுகைக்காக முதலீடு செய்வதற்கு சொல்லும் முக்கியமான காரணம், அதிலுள்ள ரிஸ்க் என்பதே. பி.பி.எஃப் முதலீட்டில் காத்திருக்கும் அதே 15 ஆண்டுகள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, காத்திருந்தால் கூடுதலாகக் கணிசமான வருமானத்தைப் பெற முடியும்.

இன்னுமொரு காரணம், 2018, ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் முதல் ரூ.1 லட்சத்துக்கு மட்டும் தான் வரிச் சலுகை இருக்கிறது. இதற்கு மேற்படும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்குப் பண வீக்க விகித சரிகட்டல் இல்லாமல் 10% வரி கட்ட வேண்டி இருக்கிறது என்பதாகும்.

பி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

உதாரணமாக, குறைவான வருமானம் தந்திருக்கும் ஃபண்டை எடுத்துக்கொள் வோம். அந்த ஃபண்டின் மூலமான நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.39.1 லட்சமாகும். இதில் ரூ.1 லட்சத்துக்கு வரி விலக்கு போக ரூ.38.1 லட்சத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். அந்த வரி ரூ.3.81 லட்சமாக இருக்கும். (மிகச் சரியாகக் கணக்கிட்டால் இந்த வரி மிகவும் குறையும்.

காரணம், 2018, ஜனவரி 31-ம் தேதிக்கு முன் செய்யப்பட்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீட் டின் மூலதன ஆதாயத்துக்கு வரி எதுவும் இல்லை) இது போக, ஆதாயமாகக் கிடைப்பது ரூ.34.29 லட்சமாகும். ஆனால், பி.பி.எஃப் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை என்றாலும், அதன் மூலம் கிடைக் கும் வருமானம் ரூ.21.04 லட்சம்தான்.

நான் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன்; நல்ல லாபம் வேண்டும் என்பவர்கள் நிதி ஆண்டில் பி.பி.எஃப் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் தலா ரூ.75,000 முதலீடு செய்துவந்தால், பி.பி.எஃப்பில் செய்யப்படும் முதலீட்டைவிடக் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதாவது, குறைவான வருமானம் தந்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் ரூ.75,000, பி.பி.எஃப்பில் ரூ.75,000 முதலீடு செய்திருந்தால், லாபமாக ரூ.27.66 லட்சம் கிடைத்திருக்கும்.

இது பி.பி.எஃப்பில் மட்டும் செய்யப்பட்டது மூலம் கிடைக்கும் ரூ.21.04 லட்சத்தைவிட ரூ.6.6 லட்சம் கூடுதலாகும். அதுவே நல்ல வருமானம் தந்த டாப் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் சிலவற்றில் ரூ.75,000 (மாதம் ரூ. 6,250) பிரித்து முதலீடு செய்திருந்தால், இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மாதம் ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும் என்பதுடன், மிகக் குறைவான லாக்இன் பீரியட் (3 ஆண்டுகள்) கொண்டதும் ஆகும்.

பி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

தற்போதைய நிலையில், பி.பி.எஃப் முதலீட்டுக்கான வட்டி வருமானம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், அதிலும் நிலையான வருமானம் இல்லை. சராசரியாக 8% வருமானம் மட்டுமே கிடைக்கக்கூடும்.

இதேபோல், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் மூலம் இப்போது கிடைக்கும் அதிக வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், 15 ஆண்டுக் காலத்தில் சராசரியாக 12% வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு!