Published:Updated:

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை... இப்போது என்ன செய்யலாம்?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை... இப்போது என்ன செய்யலாம்?

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

இப்போது விலை உயர்வைப் பார்த்து இந்திய மக்கள் அச்சம் கொள்ளும் இரண்டே பொருள்கள், ஒன்று பெட்ரோல், மற்றொன்று தங்கம். இந்த இரண்டும்தான் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்று (11.4.22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,925 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,825-க்கு வர்த்தகமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 10 நாள்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.800 அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை... இப்போது என்ன செய்யலாம்?

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளின் சந்தைகள் குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. அந்த நிலையில், தங்கத்தின் விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்தது. ஆபரணத் தங்கத்தின் வரலாற்று உச்ச விலையான 43,328 ரூபாயைத் தொடும் என்று சொல்லி வந்த நிலையில், அதிகபட்சமாகக் கடந்த மார்ச் 7-ம் தேதி ரூ.40,568-வரை சென்று விற்பனை யானது. அதற்குப் பிறகு மெள்ள மெள்ள குறைந்து வந்த தங்கம், இப்போது இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மற்றும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் போன்றவற்றின் காரணமாக மீண்டும் ஏற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமா?

தங்கம் விலை ஏற்றம் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

‘‘அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருந்துவந்தது. கடந்த மார்ச் கூட்டத்தில் ஃபெடரல் வங்கி 0.25% உயர்த்தி அறிவித்திருந்தது. வரக்கூடிய காலகட்டத்தில் வட்டி விகிதம் இன்னும் உயர்த்தப்படும் என உறுதியாக ஃபெட் அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாக டாலர் இண்டெக்ஸ் மதிப்பு 99 - 100 என்கிற நிலையில் வலுவடைந் திருக்கிறது.

டாலர் இண்டெக்ஸ் வலுவடைந்தால், தங்கத்தின் விலை குறைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, தங்கத்தின் விலை இப்போது ஏற்றம் அடைந்து வருகிறது. ஏனெனில், ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது இன்னும் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்க திட்டமிட்டுள்ளன. ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகளால் பல கமாடிட்டி பொருள்களின் விலை ஏறியிருக்கிறது. இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில் தங்கம் உள்ளிட்ட பல கமாடிட்டி பொருள்களின் விலை இன்னும் அதிகரிக்கவே அதிக வாய்ப் பிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்போது நிகழ்ந்துகொண் டிருக்கும் வர்த்தக இடைஞ்சல் களால் உலக நாடுகளில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். பணவீக்கம் அதிரிப்பதால், முதலீட்டாளர்கள் மாற்று முதலீடுகள் மற்றும் பாதுகாப் பான முதலீடுகளின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள்.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

பாதுகாப்பான முதலீட்டில் முதல் சாய்ஸாக தங்கம் இருப்ப தால், இப்போது தங்கத்தில் அதிக அளவு முதலீடு குவிய ஆரம்பித்திருக்கிறது. மேலும், இப்போது சீனாவில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத் திருப்பதால், மீண்டும் அங்கு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் கமாடிட்டி பொருள்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அவற்றின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலை தங்கத்தின் விலையிலும் எதிரொலித்து வருகிறது.

கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் மட்டும் நம் நாடு 842 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. எதிர்வரும் நாள்களில் இந்தியாவில் திருவிழாக் காலங்கள் என்பதால், தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படும் என்பதை முன் கூட்டியே உணர்ந்துகொண்ட வர்த்தகர்கள் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இப்படி மேலே சொன்ன பல காரணங்களால் எதிர்வரும் நாள்களில் தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர, பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். திருமணத் தேவைகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்போது வாங்கி வைக்கலாம்” என்றார் தெளிவாக.

தங்க நகைகள் வாங்குவதற்கான உடனடித் தேவை இருப்பவர்கள் இப்போதுள்ள விலையில் கொஞ்சம் தங்கத்தை வாங்கிவிடுவது சரியான முடிவாகவே இருக்கும். தங்க நகைகள் வாங்குவது உடனடித் தேவை இல்லை. 15, 20 ஆண்டுகள் கழித்து வாங்கினால் போதும் என்பவர்கள், தங்க நகை வாங்கும் பணத்தை கோல்டு இ.டி.எஃப் திட்டங் களில் முதலீடு செய்து வைக்கலாம்.

கோல்டு பாண்டுகளிலும் பணத்தை முதலீடு செய்வது சிறந்த யோசனையாகவே இருக்கும். இதனால் தங்கத்தின் விலையேற்றத்தை நம்மால் எளிதாகச் சமாளிக்க முடிவதுடன், செய்கூலி, சேதாரம் ஆகிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்க நகைகளைப் பத்திரமாக வைத்துப் பாதுகாப்பது என்கிற பிரச்னையும் இருக்காது என்பதால், இந்த முதலீட்டை நிச்சயம் பரிசீலிக்கலாம்!

நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி வாங்கும் தங்கம்..!

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் தங்கத்தை வாங்குகிறார்கள் என்பதை அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் உள்ள இண்டியா கோல்டு பாலிசி சென்டர் (IGPC) சர்வே செய்து சொல்லியிருக்கிறது.

பெரும் பணக்காரர்கள் அதிக மதிப்பில் தங்கம் வாங்கினால், நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிக எண்ணிக்கையில் தங்கம் வாங்கியிருக்கிறார்கள். இந்தியக் குடும்பங்களில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கத்தை ஏதோ ஒரு வடிவில் வாங்கி வைத்திருக்கிறார்கள். என்றாலும், 43% பேர் திருமணத்துக்காகத் தங்க நகை வாங்குகிறார்கள். 31% பேர் ‘எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை’ எனவும் தங்க நகை வாங்குவதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.1 - 2 லட்சம் வருமானம் உடையவர்கள் ரூ.28,968 கோடி மதிப்புடைய 58 டன் தங்கத்தை வாங்கி யிருக்கிறார்கள். ரூ.2 - 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.39,447 கோடி மதிப்புடைய 78 டன் தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள். ரூ.5 - 10 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.29,681 கோடி மதிப்புள்ள 59 டன் தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள். ரூ.10 - 20 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.21,681 கோடி மதிப்புள்ள 43 டன் தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், ரூ.2 - 5 லட்சம் வருமானம் உடையவர்களே அதிகம் தங்கம் வாங்குவது தெளிவாகப் புரியும்.

தவிர, தங்கத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதாலோ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாலோ, தங்கம் வாங்குகிற எண்ணம் குறையவில்லை. ஏறக்குறைய 94% தங்கத்தைப் பணமாகத் தந்து வாங்கவே விரும்புகிறார்கள். டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க பணக்காரர்கள்தாம் விரும்புகிறார்கள் என்கிற மாதிரியான பல தகவல்களும் இந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism