Published:Updated:

சாவரின் கோல்டு பத்திர முதலீடு... ஐந்து ஆண்டுகளில் 75% லாபம்..!

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

சாவரின் கோல்டு பத்திர முதலீடு... ஐந்து ஆண்டுகளில் 75% லாபம்..!

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் சாவரின் கோல்டு பத்திரங்கள் என்கிற பெயரில் 999 என்ற அளவில் 24 கேரட் சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டு தோறும் 2.5% வட்டி வழங்கப் படுகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வுக் காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட் டாளர்களுக்கு பணம் தேவைப்பட்டால், முதலீடு செய்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள் ளலாம்.

2016-17-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிட்டது. தங்கப் பத்திரங்கள் வெளியிடும் போது திட்டக்காலம் தொடங்கப்படுவதற்கு முன்புள்ள ஒரு வாரத்தின் சராசரி விலையில் யூனிட் களின் விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும், ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது சராசரி சுத்தத் தங்கத்தின் விலையில் இருந்து 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். அதன்படி, அந்தப் பத்திரங்கள் வெளி யிடப்பட்டபோது சுத்தத் தங்கத்தின் விலை ரூ.2,943-ஆக இருந்தது. அந்த விலையில் ரூ.50 தள்ளுபடி தரப்பட்டு, ஒரு யூனிட் விலை ரூ.2,893-ஆக நிர்ணயம் செய்யப் பட்டது.

தற்போது அந்தப் பத்திரங் கள் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள படியால், முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து தற்போது விலகிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சாவரின் கோல்டு பத்திர முதலீடு... ஐந்து ஆண்டுகளில் 75% லாபம்..!

2022 செப்டம்பர் 17 அன்று ஐந்து ஆண்டுகள் முடிவு பெறுகின்றன. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் சுத்தத் தங்கத்தின் சராசரி விலை யான ரூ.5,077 என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஐந்து ஆண்டு களுக்குமுன் ரூ.2,893 முதலீடு செய்திருந்தால், தற்போது அந்த முதலீட்டாளருக்கு ரூ.5,077 கிடைக்கும். அதாவது, ஒரு யூனிட்டுக்கு ரூ.2,184 லாபம் கிடைக்கும்.

ஒரு கிராம் தங்கத்தைதான் ரிசர்வ் வங்கி ஒரு யூனிட்டாக நிர்ணயம் செய்திருந்தது. இதன் மூலம் முதலீட்டாளர் ஒரு கிராம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஐந்து ஆண்டுகளில் 75.49% வளர்ச்சியடைந்து, அது அவருக்கு ரூ.2,184 லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கும். ஆண்டுக் கூட்டு வட்டிக் கணக்கில் பார்த்தால் இது 11.91% லாபம் ஆகும்.

இதன் மூலம் தங்கப் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு நிலையான வருமானம் தரும் வங்கி டெபாசிட் திட்டம், போஸ்ட் ஆபீஸ் சேவிங் திட்டம் போன்ற பல திட்டங்களைவிட இரண்டு மடங்கு அதிக வருமானத்தைத் தந்துள்ளது கவனிக்கத்தக்கது.

பொதுவாக, தங்க நகை வாங்கி சேர்ப்பதில் நமது மக்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். தங்க நகைகளாக வாங்கி சேர்க்கும்போது செய்கூலி, சேதாரம் மற்றும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி போன்ற பல காரணிகளால் நமது முதலீடு குறையும். மேலும், தங்க நகைகளைத் திருட்டு போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் சூழ்நிலையும் உள்ளது.

சாவரின் கோல்டு பத்திர முதலீடு... ஐந்து ஆண்டுகளில் 75% லாபம்..!

தவிர, அந்த தங்க நகைகளை நமது பணத் தேவைக் காக விற்க நினைத்தால், மார்க்கெட் விலையைவிட சற்றுக் குறைந்த விலையில்தான் விற்பனை செய்ய முடியும். இவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கும் போது, தங்க நகைகளில் இதே காலகட்டத்தில் முதலீடு செய்திருந்தால், நமது முதலீட்டின் அளவு 40% என்ற அளவுக்குத்தான் வளர்ந்திருக்கும். அதற்கு மாறாக, ஒருவர் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய் திருந்தால் அவருக்கு 75 சதவிகிதத்துக்குமேல் லாபம் கிடைத்திருப்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட் டாளர் தாம் முதலீடு செய்திருக்கும் வங்கியையோ, போஸ்ட் ஆபீஸ் கிளையையோ தொடர்புகொண்டு இந்தத் திட்டத்திலிருந்து விலகும் படிவத்தை சமர்ப்பித்தால் அவர் முதலீடு செய்திருக்கும் யூனிட்டு களுக்கான பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுவாக, இந்தப் பணம் ஒன்று முதல் மூன்று நாள்களில் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால், இதே போன்ற வருமானம் எதிர்காலத் திலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, குறிப்பிட்ட தொகை அளவுக்கு மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது!