Published:Updated:

`ஜியோவின் 0.15 சதவிகித பங்குகள்!’ - ரூ. 730 கோடி முதலீடு செய்யும் க்வால்காம்

ஜியோ
ஜியோ

கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஜியோவில் முதலீடு செய்வது கவனிக்கத்தக்கது.

ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான க்வால்காமும் ஜியோவில் முதலீடு செய்ய உள்ளது. முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம்தான் ஜியோவில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அதன் பிறகு இப்போது 13-வது முறையாக விற்கப்படும் பங்குகளை க்வால்காம் நிறுவனம் பெற உள்ளது. இந்நிறுவனம் ஜியோவின் 0.15 சதவிகித பங்குகளை ரூ.730 கோடி கொடுத்து வாங்குகிறது. இப்போது வரை மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் 25.24 சதவிகித பங்குகளை விற்றதன் மூலம் ரூ.1,18,318 கோடியை ஈட்டியுள்ளது. க்வால்காமும் இதில் தற்போது இணையவுள்ளது.

ஜியோ
ஜியோ

5ஜி சேவை திட்டம்:

இவற்றின் பங்கு சிறிய அளவிலானதாக இருந்தாலும், இந்தியாவில் முதன்முதலாக ஜியோ கொண்டு வரவுள்ள 5ஜி இணைய சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவைக்கு நாடு முழுவதும் 388 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். அரசாங்க ஏலத்திற்கான நடைமுறைகள் முடிந்தவுடன் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை இந்தியாவில் முதலில் தொடங்கத் தயாராக இருக்கிறது. இப்போதுள்ள 4ஜி சேவையைத் தொழில்நுட்பம் மூலம் 5ஜி சேவைக்கு மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், 2022-க்கு 5ஜி பிறகு தான் 5ஜி சேவை திட்டமானது சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் க்வால்காமின் இந்த முதலீடுக்கு பிறகு, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸின் ஜியோவில் கணிசமான அளவில் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே உலகின் முன்னணி நிறுவனங்களான கேகேஆர், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், முபாடாலா மற்றும் பிஐஎஃப் ஆகியவை ஜியோவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

`ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ -  மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி

தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் ஜியோ:

இதுகுறித்து க்வால்காம் நிறுவனம் கூறுகையில், ``இந்த முதலீடு மூலம் ஜியோ மற்றும் க்வால்காமிடையேயான பந்தம் வலுப்பெறும். இந்தியாவில் ஜியோ கொண்டுவரவுள்ள 5ஜி சேவையில் எங்களது ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும்’’ என்றது. பின்னாளில், 5ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் வருகையில் அவை க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 5ஜியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ நிறுவனமும் க்வால்காம் நிறுவனத்தின் 5ஜி மோடமை பயன்படுத்தும். ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தொடங்குவதற்கு முன் தொழில்நுட்ப ரீதியாக தன்னை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக தான் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. இதற்கு பிறகும் ஜியோ நிறுவனம் பல முதலீடுகளை ஈர்க்கும் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜியோ
ஜியோ

கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஜியோவில் முதலீடு செய்வது கவனிக்கதக்கது. எதிர்கால இந்தியாவின் டிஜிட்டல் முகமாக உலக சந்தையில் ஜியோ தன்னை அடையாளப்படுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அடுத்த கட்டுரைக்கு