Published:Updated:

எஃப்.டி... ஆர்.பி.ஐ புதிய விதிமுறைகள்..! டெபாசிட்தாரர்கள் கவனத்துக்கு...

சுரேஷ் பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பார்த்தசாரதி

FIXED DEPOSIT

எஃப்.டி... ஆர்.பி.ஐ புதிய விதிமுறைகள்..! டெபாசிட்தாரர்கள் கவனத்துக்கு...

FIXED DEPOSIT

Published:Updated:
சுரேஷ் பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பார்த்தசாரதி

ஃபிக்ஸட் டெபாசிட்டைப் (எஃப்.டி)பொறுத்தவரை, இனி ஆட்டோ ரெனிவல் கிடையாது. டெபாசிட் காலம் முடிந்த வுடன், இனி நீங்கள்தான் டெபாசிட் காலத்தை நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், எஃப்.டி-யில் இருக்கும் பணத்துக்கு வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டியே தரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி கூறும் போது, “கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டில் க்ளெய்ம் செய்யப்படாத எஃப்.டி கணக்குகளில் உள்ள தொகை 18,380 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒருவர் குறிப்பிட்ட தொகையை 7% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்கிறார். 3 ஆண்டு களுக்குப் பிறகு, அந்த எஃப்.டியை முடித்துக்கொள்ள வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும். அப்படி அவர் செய்யாமல், தொடர்ந்து அதே ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் வைத்திருந்தால், இதற்கு முன் எஃப்.டிக்கு உரிய வட்டி வழங்கப்பட்டது. இனி சேமிப்பு கணக்குக்கு உரிய வட்டிதான் வழங்கப் படும். புதிய விதிமுறைகளின்படி, ஃபிக்ஸட் டெபாசிட் வாடிக்கையாளர்கள் முதிர்வுக் காலத்துக்குள் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை இனி ரினிவல் செய்வதன்மூலம் வட்டி இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்’’ என்றார்.

வங்கி எஃப்.டி-யில் பணம் வைத்திருப்பவர்கள் இந்த மாற்றத்தை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism