பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உயர்த்தப்பட்ட ரெப்போ விகிதம்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ரெப்போ வட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ரெப்போ வட்டி

ரெப்போ வட்டி

ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டு அரசுக் கடன் பத்திரத்தின் வட்டி வருமானம் 7.30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

அண்மையில் ரிசர்வ் வங்கி அதிகரித்த 0.9% ரெப்போ வட்டி விகிதத்துடன் அண்மைக் காலத்தில் ரெப்போ விகிதம் மொத்தம் 1.40% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து உள்ளது. கூடவே டெபா சிட்டுக்கான வட்டியும் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், நடுத்தரக் காலத்தில் அதாவது, மூன்று முதல் ஐந்தாண்டு காலத்தில் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள், குறிப்பாக மீடியம் டூரேஷன் ஃபண்டு கள், கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

இதற்கு, இரண்டு காரணங் கள். ஒன்று, ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைப்பது. இரண்டாவது, வரி அனுகூலம் கிடைப்பது. அதாவது, மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடன் ஃபண்டுகளில் பணவீக்க விகித சரிக்கட்ட லுக்குப் பிறகு, 20% வரியைக் கட்டினால் போதும்.

உயர்த்தப்பட்ட ரெப்போ விகிதம்...
முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் (பழைய முறையில் 5%, 20%, 30%) கட்ட வேண்டும். அந்த வகையில் 20% மற்றும் 30% வரி வரம்பில் வருபவர்களுக்கு நடுத்தரக் கால கடன் ஃபண்டுகள் (Medium-Term Debt Funds) லாபகரமாக இருக்கும்.

ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுக்கு உட்பட்ட முதலீடு என்கிறபோது மணி மார்க்கெட் ஃபண்டுகள் மற்றும் ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஓரளவுக்கு லாபகர மாக இருக்கும். இதுவே முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுக்கு மேலும் ஐந்து ஆண்டுக்கு உள்ளும் இருந்தால், மீடியம் டேர்ம் கடன் ஃபண்டுகள், கார்ப்ப ரேட் பாண்ட் ஃபண்டுகள் ஆகியவற்றைக் கவனிக்கலாம்.

உயர்த்தப்பட்ட ரெப்போ விகிதம்...
முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வருமானம் எப்படி?

முன்னணி வங்கிகள் மூன்று முதல் ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் களுக்கு சுமார் 5% முதல் 5.75% வரை வட்டி வழங்குகின்றன. இதே முதிர்வுக் காலம் கொண்ட டாப் மீடியம் டூரேஷன் கடன் ஃபண்டுகள் ஆண்டுக்கு சுமார் 7 - 8% வருமானம் தந்து வருகின்றன. நல்ல தரக்குறியீடு கொண்ட கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் கார்ப்பரேட் பாண்டுகள் ஆண்டுக்கு சுமார் 7 - 7.3% வருமானம் தருகின்றன. ரெப்போ வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கப் பட்டால் கடன் ஃபண்டுகள் மிகவும் கவர்ச்சிகரமாக மாறிவிடும். காரணம், வங்கிகள் டெபாசிட்டுகளுக் கான வட்டியை உயர்த்தும்போது கடன் பத்திரங்கள் வெளியிடும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வட்டியை உயர்த்தும். இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் அதிகரிக்கும்!