Published:Updated:

தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?

தபால் அலுவலக சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
தபால் அலுவலக சேமிப்பு

சேமிப்பு

தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?

சேமிப்பு

Published:Updated:
தபால் அலுவலக சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
தபால் அலுவலக சேமிப்பு

பணத்தைச் சேமிக்க சாமான்ய மக்களின் முதல் தேர்வாக பெரும்பாலும் தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள் இருந்து வருகின்றன. எனவே, இத்தகைய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப் படும்போதெல்லாம் மிகுந்த கவனத்துக்கு உள்ளாகிறது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகரித்துவரும் நிலையில், தபால் அலுவலக சேமிப்புக்கான வட்டி விகிதங்களும் 2022 ஜூலை 1-ம் தேதி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டில் (ஆர்.டி) பணம் சேர்க்க தபால் அலுவலக ஆர்.டி-யைத் தேர்வு செய்வதா அல்லது வங்கி ஆர்.டி-யைத் தேர்வு செய்வதா என முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கும்முன், ஆர்.டி-யின் முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?

ஆர்.டி-யின் முக்கியமான அம்சங்கள்...

* பொதுவாக, 18 வயதுக்கு மேற்பட்டபவர்கள் ஆர்.டி சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம்.

* சிறிய தொகையில்கூட இந்தச் சேமிப்புக் கணத்தை ஆரம்பித்துவிடலாம். தபால் அலுவலகத்தில் மாதம்தோறும் சேர்க்கும் பணம் குறைந்தபட்சமாக ரூ.100-ஆக உள்ளது. வங்கிகளில் ரூ.100, ரூ.500, ரூ.1,000 என வங்கி களைப் பொறுத்து மாறுபடுகிறது.

* மாதத்தில் குறிப்பிட்ட தேதியில்பணம் கட்டுவதாக இந்தச் சேமிப்புத் திட்டம் உள்ளது.

* இதில் அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம்.

* ஆர்.டி கணக்கைப் புகைப்பட அடை யாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் இருந்தால் ஆரம்பித்துவிடலாம். பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் போதும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வங்கி களின் ஆர்.டி முதலீட்டில் 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படும்.

* காலாண்டுக்கு ஒரு முறை கூட்டுவட்டி கணக்கிடப்பட் டாலும், முதிர்வின்போதுதான் வட்டி வருமானம் தரப்படும்.

* தபால் அலுவலக ஆர்.டி மற்றும் வங்கி ஆர்.டி-க்கு எதிராக கடன் வாங்க முடியும்.இதற்கான வட்டி, ஆர்.டி-க் கான வட்டியைவிட சுமார் 2% கூடுதலாக இருக்கும். ஆர்.டி மதிப்பில் 70% முதல் 90% வரை கடன் வாங்க முடியும்.

* தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் ஆர்.டி கணக்கை முன்கூட்டியே முடித்தால் அபராதம் விதிக்கப்படும்.

* ஆர்.டி முடிந்த பிறகு, வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் அதை நீட்டித்துக்கொள்ள முடியும்.

* தபால் அலுவலக ஆர்.டி-யில் எவ்வளவு அதிக தொகை முதலீடு செய்தாலும் மத்திய அரசு உத்தரவாதமான சாவ்ரின் கேரன்டி உள்ளது. வங்கிகளில் ரூ.5 லட்சம் வரைக்கும்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் உத்தரவாதம் இருக்கிறது.

தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?
தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?

இனி, தபால் அலுவலக ஆர்.டி மற்றும் வங்கிகள் ஆர்.டி-களுக்கான வட்டி விகித வேறுபாடு பற்றிப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் தபால் அலுவலக ஆர்.டி வட்டி விகிதம் வங்கிகளின் வட்டி விகிதத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது தபால் அலுவலக ஆர்.டி-க்கான வட்டியைவிட வங்கி ஆர்.டி-க்கான வட்டி அதிகமாக உள்ளது.

தபால் அலுவலக ஐந்தாண்டு ஆர்.டி-க்கான வட்டி விகிதம் 5.8 சதவிகிதமாக உள்ளது. இதுவே, ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ஐந்தாண்டு ஆர்.டி-க்கான வட்டி விகிதம் 5.70 சதவிகிதமாக உள்ளது.

தபால் அலுவலக ஆர்.டி-யைப் பொறுத்தவரை, ஐந்தாண்டுகளுக்குக் குறைந்து போட முடியாது. இதுவே வங்கி ஆர்.டி என்கிறபோது 6 மாதம், 9 மாதம், 12 மாதம், 15 மாதம், 24 மாதம், 36 மாதம், 48 மாதம், 60 மாதம், 90 மாதம் என 120 மாதங்கள் வரைக்கும் போட முடியும்.

மாதங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆர்.டி-க்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். நாட்டின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ 12 மாதங்கள் தொடங்கி 120 மாதங்கள் வரைக்கும் ஆர்.டி-யை வைத்துள்ளது. வழக்கமாக டேர்ம் டெபாசிட்க்கு என்ன வட்டி வழங்குகிறதோ, அதே வட்டியை ஆர்.டி-க்கும் வழங்கி வருகிறது.

எஸ்.பி.ஐ 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கான ஆர்.டி -க்கு 5.45 சதவிகிதமும், ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு 5.50 சதவிகிதமும் வட்டி வழங்கி வருகிறது.

தபால் அலுவலகம் Vs வங்கி... ஆர்.டி முதலீட்டில் என்ன வித்தியாசம்..?

ஆர்.டிக்கு மாற்று எது..?

தற்போதைய நிலையில், ஆர்.டி-க்கு மாற்றாக எதில் முதலீடு செய்யலாம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள கடன் ஃபண்டான ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்து வரலாம். இம்முறையில் ஆறு மாதம் தொடங்கி எவ்வளவு காலத்துக்கு வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம்.

மாதம்தோறும் குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைப் பொறுத்து ரூ.100, ரூ.500, ரூ.1,000 என உள்ளது. ஆண்டுக்கு சுமார் 6% - 7% வரை முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வருமானம் கிடைக்கக்கூடும்.

இந்த முதலீட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தேவைக்கேற்ப பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அபராதம் எதுவும் கிடையாது. மேலும், வரிக்குப் பிந்தைய நிலையில் ஆர்.டி முதலீட்டைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பது சிறப்பான விஷயம்!