Published:Updated:

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஆண்டளிப்புத் திட்டங்கள்... உங்களுக்கு ஏற்றது எது?

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் 16

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஆண்டளிப்புத் திட்டங்கள்... உங்களுக்கு ஏற்றது எது?

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் 16

Published:Updated:
ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலம்

ஓய்வூதியம் (Pension) மற்றும் ஆண்டளிப்பு (Annuity) என்பது கிட்டத்தட்ட ஒரே பொருளைக் கொடுத்தாலும் சற்று வித்தியாசம் இருக்கிறது. பென்ஷன் என்பது பணியாற்று பவருக்கு பணிக்காலம் மற்றும் சம்பளத்துக்கு ஏற்ப பணி ஓய்வுக் காலத்துக்குப் பிறகு, அரசு வழங்குவதாக இருக்கிறது. இதற்கு பதில், வேலை பார்ப்பவர் தனியே முதலீடு செய்து அதன் மூலம் உருவான தொகுப்பு நிதி அல்லது மொத்த முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தொகை ஆண்டளிப்பு எனப்படுகிறது.

என்.விஜயகுமார், 
நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

வருமானம் எப்படி?

தற்போது பென்ஷன் பிளான்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 6% - 8% வரைக்கும் வருமானம் கிடைத்து வருகிறது. இது பல்வேறு கால கட்டத்தில் நுகர்வோர் சில்லறைப் பணவீக்க விகித அளவுக்கு இருக்கிறது அல்லது அதைவிட சிறிது அதிகமாக இருக்கிறது.

பணி ஓய்வுக்காலத்தில் தங்களின் சேமிப்பு அல்லது தொகுப்பு நிதியிலிருந்து பணவீக்க அளவுக்கு நிலையான வருமானம் எதிர் பார்ப்பவர்களுக்கு இந்த ஆண்டளிப்புத் திட்டங்கள் ஏற்றதாக உள்ளன. பணி ஓய்வுக்காலத்தில் விலைவாசி உயர்வைத் தாண்டி அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதல்ல.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்
ஆண்டளிப்புத் திட்டங்கள்... 
உங்களுக்கு ஏற்றது எது?

மாற்றுத் திட்டங்கள்...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஈக்விட்டி, ஹைபிரிட் மற்றும் கடன் ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவை (Portfolio) அல்லது கடன் ஃபண்ட் தொகுப்பு நிதியிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) மூலம் குறிப்பிட்டத் தொகையை மாதந்தோறும் பென்ஷன் போல் பெறும் வசதியைப் பயன்படுத்தலாம். (இந்த வசதி பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகிய வையும் மாற்றுத் திட்டங்களாக உள்ளன. (இவை பற்றியும் பின்னர் பார்ப்போம்.)

ஆண்டளிப்பு வகைகள்...

முதல் வகை, ஆயுள் காலம் முழுவதும் ஒரே தொகை ஆண்டளிப் பாகக் கிடைக்கும். ஆனால், முதலீடு என்பது திரும்பக் கிடைக்காது. இரண்டாவது வகை 5, 10, 15, 20 ஆண்டுகள் ஒரே தொகை வழங்கப்படும். அதன் பிறகு, முதலீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அப்போது நிர்ண யிக்கப்படும் தொகை மீதமுள்ள காலத்துக்கு வழங்கப்படும்; ஆனால், முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்காது.

மூன்றாவது வகை, முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை ஒரே தொகை வழங்கப்படும் இறப்புக்குப் பின் வாரிசுக்குப் பணம் கிடைக்கும்.

நான்காம் வகை, ஆயுள் காலம் முழுவதும் பென்ஷன் வழங்குவது. தொகை ஆண்டுக்கு 3% என்பதுபோல் உயர்ந்துகொண்டே போகும். போட்ட முதல் திரும்பத் தரப்படாது. இந்த வகை பாலிசி விலைவாசி உயர்வை சிறிது சமாளிக்கும் விதமாக வடிமைக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாம் வகை, முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் அவருக்கு வழங்கப்படும். அதன்பிறகு அவருடைய துணை வருக்கு (கணவன் / மனைவி) 50% பென்ஷன் வழங்கப்படும். முதலீடு திரும்பக் கிடைக்காது.

ஆறாம் வகை, முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் கிடைக்கும். அதன் பிறகு, அவருடைய துணை வருக்கும் அதே 100% பென்ஷன் கிடைக்கும். ஆனால், முதலீடு செய்த தொகை திரும்ப வராது.

ஏழாம் வகை, முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு 100% பென்ஷன் கிடைக்கும். அதன் பிறகு அவருடைய துணைவருக்கும் அதே 100% பென்ஷன் வழங்கப் படும். இருவரின் காலத்துக்குப் பிறகு, வாரிசுக்கு முதலீடு திரும்பக் கிடைக்கும்.

முதலீடு செய்பவரின் தேவைக் கேற்ப அவர் இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஆனால், ஒருமுறை தேர்ந்தெடுத்த பிறகு ஆப்ஷனை மாற்ற முடியாது.

இந்தத் திட்டங்களின் மூலமான தொகையை மாதம் / காலாண்டு / அரையாண்டு/ ஆண்டுக்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்
ஆண்டளிப்புத் திட்டங்கள்... 
உங்களுக்கு ஏற்றது எது?

எப்படிச் சேருவது?

ஆண்டளிப்புத் திட்டத்தில் பணி ஓய்வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மொத்தமாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதம் / காலாண்டு / அரை யாண்டு / ஆண்டு) முதலீடுசெய்து வரலாம் அல்லது பணி ஓய்வின் போது முதலீடு செய்து கொள்ளலாம்.

சில திட்டங்கள் ஆயுள் காப்பீட்டு கவரேஜுடன் கிடைக் கின்றன. அனைத்து ஆயுள் காப் பீட்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக் கும் தாமத ஆனுட்டி (Deferred Annuity) திட்டத்தை வைத்திருக் கின்றன. உடனடியாக ஆண்டளிப்புத் (Immediate Annuity) தொகை பெறும் திட்டத்தைப் பல நிறுவனங்கள் தருகின்றன.

பென்ஷன்போல் எவ்வளவு தொகை எப்போது வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அதற் கேற்ற திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும். அல்லது ஒருவரிடம் எவ்வளவு மொத்தத் தொகை இருக்கிறது என்பதற்கேற்ப அந்தத் தொகையை முதலீடு செய்து ஆனுட்டி திட்டத்தைப் பெற முடியும்.

வங்கி, தபால் அலுவலக ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறை போல் மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகையை முதலீடு செய்து, பின்னர் ஆண்டளிப்புத் தொகையைப் பெறும் திட்டங்களும் இருக்கின்றன.

இதற்கு முன்மொழிவுப் படிவம் (Proposal Form) ஒன்றைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன் பிறந்த தேதிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஏதாவது ஒன்று) தர வேண்டும். ஆயுள் காப்பீடு கவரேஜ் இருந்தால் மருத்துவப் பரிசோதனை சான்று தர வேண்டும். எந்த வங்கியில் ஆண்டளிப்புத் தொகை வரவு வைக்க வேண்டும் என்கிற விவரம், நாமினி ஆகியவற்றை நிரப்பித் தர வேண்டும். இந்தத் திட்டத்தில் சேர இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பெரும்பாலும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிக பட்சம் 65 வயது வரைக்கும் சேரலாம். காசோலை, கேட்பு காசோலை அல்லது ஆன்லைன் மூலம் பாலிசிக்கான பணத்தைச் செலுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை..!

# பாலிசியைத் தனியாகவோ, கணவன் – மனைவி என இணைந்தோ எடுத்துக்கொள்ளலாம்; # நாமினி நியமிக்கும் வசதி உண்டு; # ஆனுட்டி பாலிசிப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறும் வசதி கிடையாது; # பொதுவாக, ஆண்டளிப்புத் திட்டங்களில் இடையில் வெளியேற முடியாது. சில வகையான திட்டங் களில் சில நிலைகளில் வெளியேற முடியும். இது பாலிசி யின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்; # பாலிசி கள் என்னென்ன கட்டணங்கள், நிபந்தனைகள், விதி முறைகள் இருக்கின்றன எனப் பார்த்து வாங்குவது நல்லது; # பாலிசி எடுத்த பிறகு பிடிக்கவில்லை எனில், நிறுவனத்தைப் பொறுத்து 15 நாள்கள் அல்லது 30 நாள் களில் திரும்பக் கொடுக்க முடியும்.

வருமான வரி எப்படி?

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் பிளான்களில் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர் கள் வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்து வருகிறார்கள். ஆண்டளிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80C-யின் துணைப் பிரிவான 80CCC–ன்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஆனுட்டி பிளான்களில், ஆண்டளிப்புத் தொகை பெறப்போகிற காலத்தில் சேர்ந்திருக்கும் தொகுப்பு நிதியில் 33% தொகைக்கு வருமான வரி கிடையாது. மீதித் தொகை ஆண்டளிப்புத் தொகை வழங்கும் கணக்கில் இருக்கும். இந்த ஆண்டளிப்பு என்பது ஒருவரின் சம்பளம் போல் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், ஆண்டளிப்புத் தொகைக்கு வரி உண்டு. அடிப்படை வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும். தற்போதைய நிலையில், 60 வயதில் ஓய்வு பெறும்பட்சத்தில், இதர வருமானம் எதுவும் இல்லை என்கிற நிலையில், நிதி ஆண்டில் ரூ.3 லட்சம் வரைக்குமான பென்ஷனுக்கு வரி கட்ட வேண்டியிருக்காது. இதுவே மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்குக்கீழ் இருந்தால், 87A பிரிவின்கீழ் ரூ.12,500 வரிச் சலுகை கிடைக்கும். அதாவது, நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் வரி கட்ட வேண்டியிருக்காது.

ஒருவர் அவரின் வரிச் சேமிப்புக்கான முழு முதலீட்டை அல்லது வழக்கமான சேமிப்பை ஆயுள் காப்பீட்டு நிறு வனங்களில் பென்ஷன் பிளான்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, சுமார் 30% - 50% தொகையை பி.பி.எஃப், என்.பி.எஸ் போன்ற இதர முதலீட்டுத் திட்டங்களில் செய்வது நல்லது. 15 ஆண்டு முதிர்வில் பெறும் பி.பி.எஃப் தொகைக்கு வரி எதுவும் கிடையாது. என்.பி.எஸ் முதலீட்டில் 60 வயதில் பெறும் 60% தொகைக்கு வரி எதுவும் கிடையாது. அந்த வகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்கள் பின்தங்குகின்றன.

(திட்டமிடல் தொடரும்)