Published:Updated:

ஓய்வுக்காலத்திலும் வளமான வருமானம் வேண்டுமா..? கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள்

ஓய்வுக்கால முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால முதலீடு

RETIREMENT

ஓய்வுக்காலத்திலும் வளமான வருமானம் வேண்டுமா..? கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள்

RETIREMENT

Published:Updated:
ஓய்வுக்கால முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால முதலீடு

நம் முந்தைய தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். இன்றைய சுகபோகங்கள், கேளிக்கைகள் அன்று இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், பணி ஓய்வு பற்றியோ, அதன் பிறகான வருமானம் பற்றியோ அவர்களுக்குக் கவலை இருக்கவில்லை. அன்றைக்குப் பலருக்கும் அறுபது வயது வரை வேலை இருந்தது; அதன்பின் பென்ஷன் கிடைத்தது. அல்லது பி.எஃப் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, மாதம்தோறும் பணவீக்கம் தாண்டிய வட்டி வருமானம் பெறமுடிந்தது. ஆனால், இன்று..?

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

வங்கிகள் தரும் வட்டி விகிதம் (சீனியர் சிட்டிசன்களுக்கு கொஞ்சம் அதிகம் என்றாலும்) ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்து வருகிறது. இன்றைய தேதியில் உலக அளவில் இருபது நாடுகளிலாவது 0% வட்டி நிலவுகிறது. ஜப்பானில் நம் பணத்தை வங்கிகள் பத்திரமாக வைத்திருப்பதற்கு நாம்தான் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த நாடுகளில் நிலவும் எதிர்மறை (Negative Rate) வட்டி விகிதங்கள் நம் நாட்டிலும் அரங்கேற அதிக காலம் பிடிக்காது என்பதை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும். அப்படி வட்டி விகிதம் சுருங்கிய நிலையில், சீனியர் சிட்டிசன்கள் நிலையான மாத வருமானம் பெற வங்கிகளைத் தாண்டி முதலீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தற்போது சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் (7.40% வட்டி, அதிகபட்ச முதலீடு 15 லட்சம், ஐந்து வருடங்களுக்கு), எல்.ஐ.சி-யின் வயவந்தன யோஜனா (7.40% வட்டி, அதிகபட்ச முதலீடு 15 லட்சம், பத்து வருடங்களுக்கு) மற்றும் ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் பாண்டுகள் (தற்போது 7.15% வட்டி, முதலீட்டுக்கு உச்ச வரம்பு இல்லை, ஏழு வருடங்களுக்கு) போன்ற திட்டங்கள் ஓய்வு பெறுவோருக்கு ரிஸ்க் இல்லாத வருமானம் தருபவையாக இருக்கின்றன. இவை தவிரவும் வேறு வழிகள் இருக்கின்றன.

ஓய்வுக்காலத்திலும் வளமான வருமானம் வேண்டுமா..? கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள்

1. வாடகை வருமானம்

காலங்காலமாக ஓய்வுக்காலத்தில் வாடகை வருமானத்தை நம்பகமான வருமான வழியாகப் பார்த்து வருகிறோம். ஆனால், அவை வெறும் இரண்டு சதவிகிதமாகத் தேய்ந்துவிட்டன. ஆயினும், மாதாந்தர வாடகை வருமானத்தை விரும்புவோர்க்கு ரெய்ட் (REIT- Real Estate Investment Trust) ஒரு நல்ல வழிமுறையாக வந்துள்ளது. நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம்; பல நாடுகளில் இது ஒரு பிரபலமான திட்டம்.

மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் பங்குகளை அல்லது பாண்டுகளை வாங்குவது போல், ரெய்ட் திட்டத்தை நடத்தும் ஃபண்ட் மேனேஜர் நல்ல வாடகை தரக்கூடிய சொத்துகளை (மால் / தியேட்டர்/ ஆஸ்பத்திரி / ஆபீஸ் கட்டடங்கள் போன்றவை) வாங்கி அதில் வரும் வருமானத்தில் செலவு போக மீதியை டிவிடெண்டாகத் தருவார். இது போன்ற கமர்ஷியல் சொத்துகளில் இருந்துவரும் வாடகை சாதாரண வீடுகள் தரும் வாடகை வருமானத்தைவிட அதிகம். மேலும், பங்குகள் போல் செயல்படும் இந்த ரெய்ட்டுகளில் இருந்து மூலதன லாபமும் (Capital Gain) கிடைக்கும். சொத்துகளை வாங்குதல், பராமரித்தல், வாடகை பிரித்தல் போன்ற எந்தத் தலைவலியும் இன்றி வாடகை வருமானம் பெற இது ஒரு நல்ல வழி.

2. நீண்டகால பாண்டுகள்

வங்கிகள் தரும் வைப்புநிதி போல் அரசு மற்றும் பெரிய கம்பெனிகளும் நீண்ட கால பாண்டுகள் வெளியிடு கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட முதிர்வுக்காலம் கொண்ட இவற்றில் வட்டி விகிதம் அதிகம் கிட்டுகிறது. அடுத்துவரும் வருடங்களில் வட்டி விகிதம் குறைந்தாலும், நம் வருமானம் குறையாது. நாம் முதலீடு செய்யும் கம்பெனிகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்டு இதில் இறங்கலாம்.

3. நல்ல டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள்

கோல் இந்தியா, ஐ.டி.சி, பிரிட்டானியா போன்ற தரமான பங்குகள் சிறந்த வருமானம் தருபவையாகவும் உள்ளன. இவற்றில் செய்யும் முதலீடுகளுக்கு டிவிடெண்ட் மற்றும் முதலீட்டு ஆதாயம் என இரண்டு வகை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சந்தையில் நல்ல டிவிடெண்ட் வருமானம் தரக்கூடிய தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து நம் போர்ட்ஃபோலியோவில் சேர்த்து வைத்தால் நிலையான வருமானம் உத்தரவாதமாகக் கிடைக்கும். சந்தை சிறிது சரிந்து, இவற்றின் விலை குறையும்போது சரியான விலையில் இவற்றை வாங்குவது முக்கியம்.

4. தொடர்ந்து வளரும் தரமான பங்குகள்

நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற தரமான நிறுவனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கி நம் போர்ட்ஃபோலியோவில் சேர்த்து ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை போர்ட்ஃபோலியோவை வளர்க்கலாம். பின்னர், வருடம் தோறும் மொத்த முதலீட்டில் 4% அளவுக்கு எடுத்துச் செலவினங் களுக்கு பயன்படுத்தலாம். இந்த முறையில் செயல்பட்டால் நம் சேமிப்பு நீண்டகாலத்துக்குக் கைகொடுக்கும்.

மேற்கண்ட நான்கு வழிமுறை களையும் ஓய்வுக்காலத்துக்கு 5 - 7 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தால்தான் ஓய்வுக் காலத்தில் போதிய வருமானத்தை உண்டாக்க முடியும். ஓய்வுக் காலத்தை நெருங்கிவிட்டவர்கள் அல்லது ஏற்கெனவே ஓய்வு பெற்றவர்கள் சிறிய பிசினஸ் நடத்துவது அல்லது ஆலோசனை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

இன்றைய நிலையில், 60 வயதில் யாரும் வீட்டில் முடங்கிக் கிடக்க விரும்புவதில்லை. தங்கள் ரிடையர்மென்ட் ஃபண்டில் ஒரு பகுதியை வைத்து கடை அமைக் கிறார்கள்; அல்லது தாங்கள் பெற்ற அனுபவப் பாடங்களை மூலதனமாக வைத்து இளைய தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இதன் மூலம் பொழுதுபோக்கு, பணத் தேவை போன்ற இரு தேவைகளும் பூர்த்தி ஆகின்றன. இதில் நம் சௌகர்யத்துக்கு ஏற்ப வேலை நேரத்தை அமைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

இவை அனைத்தையும்விட முக்கிய மானது, நம் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது. “பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவை முடிந்துவிட்டது; கேளிக்கை, சுற்றுலா போன்றவையும் குறைந்து விட்டன. இன்னும் எதற்குச் சிக்கனம்” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இன்று உடல்நலக் குறைபாடுகள் பெருகி விட்டன. அவற்றுக்கு ஆகும் செலவும் விண்ணைத் தாண்டுகின்றன. வயதான வர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் தருவதற்கு பல கம்பெனிகள் தயாரில்லை. இந்தச் சூழ்நிலையில், நாம் சிக்கனத்தைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். இதைப் புரிந்துகொண்ட சிலர், பணி ஓய்வுக்குப் பின், மெட்ரோ நகரங்களை விட்டு, சிறு நகரங்களுக்குக் குடிபெயர்ந்து எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

நம் ஓய்வுக்காலத்தை இனிமையாகவும் சௌகர்யமாகவும் அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நமக்குப் பொருத்தமான எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து நாம் பயன்பெறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism