Published:Updated:

ஃப்ராங்க்ளின் மீது செபி நடவடிக்கை... நடந்தது என்ன..? முதலீட்டுத் தொகை கிடைக்குமா?

முதலீட்டாளர் நிலை....
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டாளர் நிலை....

M U T U A L F U N D

ஃப்ராங்க்ளின் மீது செபி நடவடிக்கை... நடந்தது என்ன..? முதலீட்டுத் தொகை கிடைக்குமா?

M U T U A L F U N D

Published:Updated:
முதலீட்டாளர் நிலை....
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டாளர் நிலை....

சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் துறையில் இவ்வளவு கடின நடவடிக்கைகளை செபி எடுத்ததில்லை. ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு கடும் நடவடிக்கை செபி எடுத்திருக் கிறது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு எந்தவிதமான கடன் சார்ந்த திட்டங் களையும் (என்.எஃப்.ஓ) வெளியிடக் கூடாது. தவிர, கடன் சார்ந்த திட்டங் களில் கடன் மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வருமானம் (ஆறு கடன் சார்ந்த திட்டங்களில்) மற்றும் அந்தத் தொகைக்கு 12% வட்டி என ரூ.512 கோடியைத் திருப்பித்தர உத்தர விட்டுள்ளது. இது தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரும் பதற்றம் இருக்கும் சூழ்நிலையில், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் செய்த தவறு என்ன என பிரைம் இன்வெஸ்டர் நிறுவனத்தின் ஶ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘இந்த நிறுவனம் ஒரே பிரிவில் பல ஃபண்டுகளை நடத்தி வந்தது. இதை மாற்றி ஒரு பிரிவில் ஒரு ஃபண்ட் மட்டுமே செயல்பட வேண்டும் என்னும் விதிமுறையை செபி மாற்றி அமைத்தது. ஆனால், இந்த நிறுவனத்தில் ஆறு ஃபண்டுகள் வேறு வேறு பெயரில் இருந்தாலும் முதலீடு செய்த போர்ட்ஃபோலியோவில் பெரிய வித்தியாசம் இல்லை. இது முதல் சிக்கல்.

இரண்டாவதாக, கடன் சார்ந்த ஃபண்டுகளில் கால அளவு முக்கியம். ஒருவாரம், ஒரு மாதம் எனப் பல கால வகையில் முதலீடு செய்யப்படும். முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால தேவைக்காகத்தான் முதலீடு செய்வார்கள். எனவே, நிறுவனமும் அதே கால அளவில் கடன் பத்திரங் களில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், குறுகியகாலத் திட்டங்களில் நீண்டகால கடன் பத்திரங்களில் நிறுவனம் முதலீடு செய்தது பெரிய தவறாக அமைந்துவிட்டது.

மூன்றாவது, ஒவ்வொரு ஃபண்டிலும் பணத்தை எடுக்கக்கூடிய தன்மை வேண்டும். ஆனால், போதுமான பணப்புழக்கத்தை நிறுவனம் ஏற்படுத்தி வைக்கவில்லை கோவிட் காரணமாகப் பணப்புழக்கம் குறைந்திருக்கிறது என்னும் வாதம் எடுபடவில்லை. கோவிட் வராமல் இருந்தாலும்கூட தற்போதைய நிலைமையே ஏற்பட்டிருக்கும். இதைச் சாதாரண பிசினஸ் முடிவில் ஏற்பட்ட தோல்வியாகக் கருத முடியாது. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவே கருதலாம். இது தவிர, கடன் பத்திரங்களை சரியாக மதிப்பீடு செய்யாதது, ரிஸ்க் மேனேஜ்மென்ட் முறையை சரியாக பின்பற்றாதது என பல காரணங்களை செபி குறிப்பிட்டிருக்கிறது.

முதலீட்டாளர்...
முதலீட்டாளர்...

இதன் மூலம் செபி இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்கிறது. முதலாவதாக, முதலீட்டாளர்கள் நலனில் எந்தவிதமான சமரமும் செய்துகொள்ளக் கூடாது. இரண் டாவது, ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் மற்றும் ஃபண்ட் மேனேஜர்கள் விதிமுறைகளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை இதர ஃபண்ட் நிறுவனங் களுக்குச் சொல்லாமல் சொல்லி யிருக்கிறது. இதனால் இனி ஃபண்ட் மேனேஜர்கள் ரிஸ்க் எடுப்பது குறையும். இதனால் வருமானம் குறையவும் வாய்ப்புண்டு’’ என்றார் ஶ்ரீகாந்த் மீனாட்சி.

செபியின் இந்த உத்தரவை எதிர்த்து ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மேல்முறையீடு செய்யவிருக்கிறது. அதுவரை அபாராதத் தொகையை அந்த நிறுவனம் செலுத்தாது எனச் சொல்லப்படுகிறது. இதனால், இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் தொகை கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்து விடக்கூடாது என்பதற்காக செபி எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism