Published:Updated:

தவறான, மோசடியான ஷேர் டிப்ஸ்கள்... முதலீட்டாளர்களை செபி எச்சரிப்பது ஏன்?

Representational Image
Representational Image

எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப், இணையதளம், சமூக வலைதளம் மூலம் வரும் மூன்றாம் தரப்பு முதலீட்டு டிப்ஸ்களை நம்ப வேண்டாம் என செபி சொல்லியிருக்கிறது.

``முதலீட்டு டிப்ஸ் குறித்து செபி எச்சரிக்கை விடுத்திருக்கிறதே?"

``தவறாக வழி நடத்தும் விதமாக, யார் என்றே தெரியாதவர்களிடமிருந்து வரும் முதலீட்டு டிப்ஸ் குறித்து உஷாராக இருக்கும்படி செபி அமைப்பு முதலீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப், இணையதளம், சமூக வலைதளம் மூலம் வரும் மூன்றாம் தரப்பு முதலீட்டு டிப்ஸ்களை நம்ப வேண்டாம் என செபி சொல்லியிருக்கிறது.

அனாமத்து ஷேர் டிப்ஸ், முதலீட்டு ஆலோசனைகள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வகைகளில் வருவது அதிகரித்து வருவதாக செபிக்கு பல வகையிலும் புகார் வந்ததை அடுத்து அது முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்திருக்கிறது.

குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும்படி அல்லது இலக்கு விலை குறிப்பிட்டு தவறான புள்ளி விவரங்களுடன் வரும் டிப்ஸ் குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என செபி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஷேர்லக்
ஷேர்லக்

இதுபோன்ற தவறான மற்றும் மோசடியான டிப்ஸ்கள் தனிப்பட்ட முதலீட்டாளர்களை மட்டும் பாதிக்கவில்லை. அது பங்குச் சந்தை முதலீடு குறித்த நம்பகத்தன்மையையும் பாதிப்பதாக செபி குறிப்பிட்டுள்ளது."

``2021-ல் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறதே?"

``சர்வதேச நிதியம் (IMF), கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பு 2020 -ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவிகிதம் சரிவடையும். அடுத்த ஆண்டு 5.5% வளர்ச்சி காணும் எனக் கணித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 5.8% குறையும். 2021-ம் ஆண்டு 3.9% வளர்ச்சி காணும். இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு 2020-ம் ஆண்டு 10.3% சரிவடையும். ஆனால், அடுத்த ஆண்டு 8.8% வளர்ச்சியுடன் மீண்டு எழும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. அதன்மூலம் வேகமாக வளரும் நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறும். கடந்த 2019–ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 4.2% ஆக இருந்தது."

> அதிக டிவிடெண்ட் யீல்டு கொண்ட பொதுத்துறை நிறுவனப் பங்குகளை இப்போது முதலீட்டுக்கு கவனிக்கலாமா?

> ஃபார்மா பங்கில் முன்னணி முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரிக்க காரணம் என்ன?

> ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி பற்றி முக்கிய செய்தி வெளியாகியிருக்கிறதே!

> பி.எம்.எஸ் திட்டங்கள் அதிக வருமானம் கொடுக்க என்ன காரணம்?

> இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவு எப்படி?

> தனியார் வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகமாக இருக்கிறதே?

- இந்தக் கேள்விகளுக்கான ஷேர்லக் தகவல்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஷேர்லக் : பார்மா பங்குகளில் முதலீட்டை அதிகரித்த ராகேஷ், எல்.ஐ.சி..! - என்னதான் காரணம்..? https://bit.ly/3kood0M

முதலீடு
முதலீடு

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு