Published:Updated:

செபிக்கு தலைமை ஏற்கும் முதல் பெண் மாதபி புரி..!

செபி
பிரீமியம் ஸ்டோரி
செபி

லீடர்ஷிப்

செபிக்கு தலைமை ஏற்கும் முதல் பெண் மாதபி புரி..!

லீடர்ஷிப்

Published:Updated:
செபி
பிரீமியம் ஸ்டோரி
செபி

சர்வதேச அளவில் பங்குச் சந்தை ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு களில் சுதந்திரமாகவும், எந்தவித சார்புகளும் இல்லாமலும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் அமைப்பாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த் தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) விளங்குகிறது.

அத்தகைய சிறப்புமிக்க செபி அமைப்பின் தலைமை பதவியில் முதல் முறையாகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் மாதபி புரி பச். செபியின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் பதவிக்காலம் பிப்ரவரி யுடன் முடிவடைந்த நிலையில் இவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாதபி புரி
மாதபி புரி

ஐ.ஏ.எஸ் அதிகாரியான அஜய் தியாகி, 2017-ம் ஆண்டு மார்ச் 1-ல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுக்காலம் அவர் இந்தப் பதவியை வகித்தார்.

தியாகியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவரது பதவிக் காலம் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் மீண்டும் 18 மாதங்களுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இப்படி இருமுறை நீட்டிக்கப்பட்ட பதவிக் காலமும் கடந்த வாரத்தில் முடிவடைந்த நிலையில், செபி அமைப்பின் நிர்வாகக்குழுவின் முழுநேர உறுப்பினராக இருந்த மாதபி புரி செபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதமே செபி தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பெறப்பட்டன. ஆனால், புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஒருவர்கூட இந்தப் பட்டியலில் இருந்தார்.

பொருளாதார விவகார செயலாளர் மற்றும் வெளியிலிருந்து மூன்று துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு விண்ணப்பங்களை ஆராய்ந்து நேர்காணல் செய்துள்ளனர். என்.எஸ்.இ முறைகேடு விவகாரம் சூடுபிடித்த நிலையில், இறுதியாக மாதபி புரி செபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செபியின் முதல் பெண் தலைவர் மாதபி புரி என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது டன், தனியார் துறையிலிருந்து ஒருவர் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதுவே முதல்முறை. யார் இந்த மாதபி புரி..?

ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் நிர்வாகம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்தவர், 1989-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் தனது பணி வாழ்க்கை யைத் தொடங்கினார் மாதபி. தொடர்ந்து நிதித்துறை சார்ந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர், பிப்ரவரி 2009 முதல் 2011 மே வரை ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.

2011-ல் சிங்கப்பூரில் உள்ள கிரேட்டர் பசுபிக் கேபிட்டல் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். பிரிக்ஸ் அமைப்பு கொண்டுவந்த நியூ டெவலப்மென்ட் வங்கிக்கும் ஆலோசகராக இருந்தார். இவை தவிர, பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இவர் இருந்திருக்கிறார். 2017 ஏப்ரல் 5 முதல் 2021 அக்டோபர் 4 வரை யிலான காலத்தில் செபி அமைப்பில் நிர்வாகக் குழுவில் முழுநேர இயக்குநராக இருந்துள்ளார். அப்போது செபி அமைப்பில் கண்காணிப்பு, கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் முதலீட்டு மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களிலும் இவர் தன்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் செபியின் இயக்குநர் குழுவில் இருந்தபோது பல்வேறு விவகாரங்களில் இவரது நடவடிக்கை கள் எந்தவித சமரசமும் இல்லாமல் கடுமையாக இருந்ததாக பங்குச் சந்தை வட்டாரத்தில் தெரிவிக் கிறார்கள்.

செபிக்கு தலைமை ஏற்கும் முதல் பெண் மாதபி புரி..!

2021 டிசம்பரில் மாதபி புரி செபி அமைப்பில் உள்ள ‘லீவரேஜிங் ரெகுலேட்டரி மற்றும் டெக்னாலஜி தீர்வுகள்’ ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏழு நிபுணர்களைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழு, செபியின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும், சந்தை முரண்பாடுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான தொழில் நுட்பத் தீர்வுகளை ஆராய்வதற்கும் தேவையான வழிகாட்டுதலை செபிக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலும் அவர் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார்.

நிதித்துறை, பங்குச் சந்தை ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட மாதபி, செபி அமைப்பின் தலைவர் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இவரது பதவிக் காலத்தில் இன்னும் பல கோடி இந்தியப் பெண்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கட்டும்!