Published:Updated:

செக்டார் & தீமெட்டிக் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்..!

ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் முதலீடு

ஃபண்ட் முதலீடு

செக்டார் & தீமெட்டிக் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்..!

ஃபண்ட் முதலீடு

Published:Updated:
ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் முதலீடு

ஶ்ரீநாத் எம் எல், சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட், ஃபண்ட்ஸ்இந்தியா

செக்டார் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளில் குறிப்பிட்ட துறை மற்றும் தீம் (Theme) அடிப்படையில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

செக்டார் ஃபண்டுகளில் ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். உதாரணமாக வாகனம், வங்கி, மருந்து தயாரிப்பு போன்ற துறைகளாகும்.தீமெட்டிக் ஃபண்டுகளில் குறிப்பிட்ட தீமின் அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்யப்படும். செக்டார் ஃபண்ட் உடன் ஒப்பிடும்போது தீமெட்டிக் ஃபண்டுகளில் செக்டார் பரவலாக்கம் அதிகமாக இருக்கும். நுகர்வு, உள்கட்டமைப்பு, உற்பத்தி போன்ற கருத்துகள் தீமெட்டிக் ஃபண்டுகளுக்கு உதாரணங்களாகும்.

செக்டார் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆறு முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

செக்டார் & தீமெட்டிக் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்..!

லாபம் ஈட்டக்கூடிய துறையை அடையாளம் கண்டு பிடித்திருக்கிறீர்களா?

முதலில், எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் துறையை அடையாளம் காண வேண்டும். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தீம்கள் சிறப்பாகச் செயல்படும். கடந்த ஆண்டுகளில் சிறப்பாக இயங்கிய செக்டார்கள் அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படாமல் போகலாம். இதேபோல், இப்போது சிறப்பாகச் செயல்படாமல் இருக்கும் தீம்கள் அடுத்து வரும் ஆண்டுகளிலும் நன்றாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளில், ஒரு வருடத்தில் பர்ஃபாமன்ஸ் அடிப்படையில் முதலிடத்திலிருந்த துறைகள் மற்றொரு ஆண்டில் கீழ் தரவரிசைக்கு இறங்கியுள்ளன. உதாரணத்துக்கு, ரியல் எஸ்டேட், எஃப்.எம்.சி.ஜி, மெட்டல், ஹெல்த்கேர், மீடியா & ஐ.டி போன்ற துறைகளைக் குறிப்பிடலாம். எனவே, எதிர்காலத்தில் எந்தத் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதைக் கண்டறிவது அவசியம்.

உங்களின் முதலீடு செக்டார் / கருப்பொருள் துறைகளில் எவ்வளவு இருக்கிறது?

ஏற்கெனவே உள்ள உங்களின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) குறிப்பிட்ட துறை, தீமில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

போர்ட்ஃபோலியோவில் ஏற்கெனவே கருப்பொருள் / செக்டார்களுக்கு போதிய அளவு ஒதுக்கீடு செய்திருந்தால், அவற்றில் மேலும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இவை அதிக ரிஸ்க் கொண்டவை. மேலும் மேலும் அவற்றில் முதலீடு செய்தால் ரிஸ்க் மிகவும் அதிகரித்துவிடும்.

சரியான நேரத்தில் தீம் முதலீடு செய்யவும், வெளியேறவும் முடியுமா?

தீம்கள்/செக்டார்களில் முதலீடு செய்யும் போது முதலீடு செய்யும் நேரம் மற்றும் வெளியேறும் காலம் (Timing) மிகவும் முக்கிய மானது. கடந்த காலங்களில், பெரும்பாலான துறைகள் மற்றும் தீம் அடிப்படையிலான குறியீடுகள் (ரியல் எஸ்டேட், டெலிகாம், எனர்ஜி, இன்ஃப்ரா, பி.எஸ்.யூ போன்றவை) மற்ற பரவலாக்கப்பட்ட (Diversified Indices) குறியீடுகளுடன் ஒப்பிடும்போது, நீண்டகால பர்ஃபாமன்ஸ் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான துறைகள் வணிக மற்றும் பொருளாதார சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படக் கூடியவையாக உள்ளன.

சுழற்சி தொடங்கும் முன் நீங்கள் அந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து, சுழற்சியின் உச்சத்தில் யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

அதிக ஏற்ற இறக்கத்தை உங்களால் கையாள முடியுமா?

துறைசார் மற்றும் கருப்பொருள் ஃபண்டுகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்தக் குறியீடுகளில் நீண்ட காலத்துக்கு சரிவுகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, நிஃப்டி உள்கட்டமைப்பு குறியீடு 2006–ம் ஆண்டு முதல் பெரும்பாலும் சரிவு நிலையிலேயே உள்ளது.

எனவே, துறைகளின் இறக்கத்தைக் கையாளும் திறன், சமாளிக்கும் திறன், அதிக முதலீட்டுக் காலம் இருந்தால் மட்டுமே செக்டார் மற்றும் தீம் அடிப்படையிலான ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

மதிப்பீடு அதிகமாக இருக்கும்பட்சத்தில் லாபம் கிடைக்குமா?

அடுத்த சவால், இந்த வகை ஃபண்டுகளுக்காக முதலீடு செய்யப்பட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பீடுகள் ஏற்கெனவே மிக அதிகமாக உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பங்கு விலை மாற்றம் ஒரு நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் லாபத்தின் அடிப்படையில் இருக்கும். பங்குகளின் விலை மதிப்பீடு மிக அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் அவற்றின் மூலமான வருமானம் அதிகமாகக் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு ஆகும்.

சரியான ஃபண்டுகளைத் தேர்வு செய்திருக்கிறீர்களா?

இறுதியாக, சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தீம் சாதகமாக இருந்தாலும், தீம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்படும் என்று சொல்ல முடியாது.

இதைக் கருத்தில்கொண்டு, செக்டார் அல்லது தீமெட்டிக் ஃபண்டின் கடந்த கால செயல்திறன், ஃபண்ட் மேனேஜரின் செயல்பாடு ஆகியவற்றை அறிந்து ஃபண்டைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

நிறைவாக, கருப்பொருள் / துறை ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு நான்கு விஷயங்கள் சரியாகச் செய்ய வேண்டும். லாபகரமான தீம் / துறையை அடையாளம் காணுதல், சரியான நேரத்தில் முதலீடு செய்யும் மற்றும் வெளியேறும் திறன், சரியான மதிப்பீட்டில் முதலீடு செய்தல் மற்றும் சிறந்த ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை அந்த நான்கு விஷயங் களாகும்.

இந்த நான்கையும் சரியாகச் செய்வது மிகவும் கடினமாகும். டைவர்சிஃபைடு ஃபண்டுகளில், துறை / தீம் சார்ந்த நிறுவனப் பங்குகள் ஃபண்ட் மேனேஜரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எனவே, நேரம் காலம் பற்றி முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த அட்வான்டேஜ், துறை சார்ந்த மற்றும் கருப்பொருள் ஃபண்டு களில் இல்லை. துறை / தீம் நன்றாகச் செயல்படாது என்றாலும் துறைசார் / கருப் பொருள் ஃபண்டுகள் அதே உத்தியைத் தொடர வேண்டும்.

எனவே, துறைசார் / கருப் பொருள் ஃபண்டுகள் உங்கள் பிரதான போர்ட் ஃபோலியோ வின் பகுதியாக இருக்கக் கூடாது. செக்டார் / தீம்களில் முதலீடு செய்ய விரும்பும், அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் இந்த ஃபண்டுகளை ‘அதிக ரிஸ்க் - அதிக ரிட்டர்ன்’ என்கிற தனிப் பகுதியாகக் கருதலாம். இது ஒட்டுமொத்த போர்ட் ஃபோலியோவில் 10 - 15 சதவிகித் துக்கு மேல் இருக்கக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism