Published:Updated:

சரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

சரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் ஈட்ட வேண்டும் எனில், முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதுதான் ஃபண்ட் தேர்வு...

குறுகிய காலத்தில் குறிப்பாக, கடந்த ஓராண்டுக் காலத்தில் ஒரு ஈக்விட்டி ஃபண்ட் தந்த வருமானத்தை வைத்து மட்டுமே அந்த ஃபண்டில் முதலீடு செய்வதற்கான முடிவை எடுக்கக் கூடாது. ஒரு நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுக்க பின்வரும் ஐந்து முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

1. இறக்கச் சந்தையில் ஃபண்டின் செயல்பாடு...

தொடர் ஏற்ற சந்தையில் ஒரு ஃபண்ட் சிறப்பாகச் செயல்படுவது பெரிய விஷயம் இல்லை. சந்தை இறங்கும்போது அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் எந்த அளவுக்கு இறக்கம் கண்டிருக்கிறது, சந்தையைவிட அதிக இறக்கம் கண்டிருக்கிறதா அல்லது குறைவாக இறக்கம் கண்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

பங்குச் சந்தை ஏறும்போது சந்தையைவிட அதிகமாகவும், இறங்கும்போது சந்தையை விடக் குறைவான இறக்கத்தைக் கொண்டிருக்கும் ஃபண்ட் சிறந்ததாக இருக்கும்.

2. கடந்த 10 ஆண்டுக் கால செயல்பாடு எப்படி?

முதலீட்டுக்கு நீங்கள் தேர்வு செய்யப் போகிற மியூச்சுவல் ஃபண்ட் குறிப்பாக, ஈக்விட்டி ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்குச் சராசரியாக என்ன வருமானம் தந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தப் பத்து ஆண்டுகளில் பங்குச் சந்தை குறைந்த பட்சம் ஒரு மிகப் பெரிய ஏற்றம் மற்றும் ஒரு மிகப் பெரிய இறக்கத்தைச் சந்தித்திருக்கும். அந்த வகையில் ஒரு ஃபண்டின் உண்மையான நீண்ட கால முதலீட்டுத் திறன், கடந்த 10 ஆண்டுகளின் வருமானத்தை அலசி ஆராய்வது மூலம் தெரியவரும். நீண்ட கால ஆராய்ச்சி என்பது அந்த ஃபண்ட் குறித்த ஒரு தெளிவான மற்றும் நிலையான கருத்தை முதலீட்டாளருக்கு அளிக்கும்.

சரியான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

3. நிர்வகிக்கப்படும் தொகை

ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் தொகை அதிகமாக இருப்பது நல்லது. அதாவது, அந்தக் குறிப்பிட்ட ஃபண்டின் மீது நம்பிக்கை கொண்டு அதிகம் பேர் முதலீடு செய்திருக் கிறார்கள் என்பது அதன் அதிக நிர்வகிக்கும் தொகை நமக்குச் சுட்டிக்காட்டும் விஷயமாகும்.

மேலும், நிர்வகிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது அல்லது வேறு எந்தச் சூழ்நிலை யிலாவது திடீரென பலர் அந்த ஃபண்டிலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை வெளியே எடுக்கும்போது, அந்த ஃபண்ட் அதிகம் சிக்கலுக்கு உள்ளாகாது; ஃபண்ட் மேனேஜரும் நிதானமாகச் செயல்பட முடியும். எனவே, ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப் படும் தொகை முக்கியமாகும்.

4. நீண்ட கால முதலீடு

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் எப்போதும் வருமானத்தைத் துரத்திச் செல்லக் கூடாது. முதலீடு செய்வது திரில்லிங் அனுபவம் கிடையாது. அது போர் (bore) அடிக்கிற ஒரு விஷயமாகும். நிலை யாகத் தொடர்ந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) மற்றும் மொத்த முதலீட்டை மேற்கொண்டு வரும் போது நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரும் அதே நேரத்தில் சந்தை இறக்கத்தில் எக்காரணம் கொண்டும் அதை நிறுத்தாமல் தொடர வேண்டும். கூடவே சந்தை இறக்கத்தில் முடிந்தால் மொத்த முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, கோவிட் 19 பாதிப்பின்போது சந்தை சுமார் 40 - 50% இறங்கி இருந்த காலத்தில் நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு மிகவும் சரிந்து காணப் பட்டது. அப்போது மொத்த முதலீட்டை மேற்கொண்ட வர்கள் விரைவிலேயே நல்ல லாபத்தைப் பார்த்தனர்.

5. எதிர்கால செயல்பாடு

ஒரு ஈக்விட்டி ஃபண்டை எடுத்துகொண்டால், அதில் சுமார் 25 முதல் 50 நிறுவனப் பங்குகள் வரை முதலீடு செய்யப்பட்டிருக்கும். இந்த நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்தைப் பொறுத்துதான் அந்த ஃபண்டின் எதிர்கால வருமானம் இருக்கும். எனவே, குறிப்பிட்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றிருக்கும் நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஆராய்வது மூலம் சரியான ஃபண்டைத் தேர்வு செய்ய முடியும். இந்த விஷயத்தில் முதலீட்டாளரால் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிய வில்லை எனில், நல்ல நிதி ஆலோசகரை நாடுவது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism