Published:Updated:

Share Market Doubts: பங்குகளின் விலையை நிர்ணயிப்பது ஆபரேட்டர்களா?

Share Market Doubts
Share Market Doubts

ஆபரேட்டர்கள் என்ற பங்குகளின் விலையைச் செயற்கையாக ஏற்றுபவர்களின் பங்களிப்பு ஒரு சிறு பகுதியாக இருக்கும்:

Share Market Doubts: பங்கு முதலீட்டுக்கான டீமேட் கணக்கு, ஷேர் டிரேடிங் கணக்கு விளக்க முடியுமா?

- கமலேஷ், பெங்களூரு

''நீங்கள் பங்குச் சந்தையில் ஈடுபட வேண்டுமானால், இரண்டுவிதமான கணக்கைத் தொடங்குவீர்கள். ஒன்று, பங்குகளை வாங்கி விற்கப் பயன்படுத்தும் டிரேடிங் அக்கவுண்ட். மற்றது, இவ்வாறு வாங்கிய பங்குகளை வைத்திருக்க உதவும் மின்னணுக் கணக்கு - டிமேட் கணக்கு. இது வங்கிக் கணக்குபோல் செயல்படும். பங்குகளை வாங்கினால், அது டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். விற்றால், டிமேட் கணக்கிலிருந்து வெளியேறும்.''

பங்குகளின் விலையை ஆபரேட்டர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்களா?

- சிவகுமரன், திருச்சி-1

Share Market Doubts: ''பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் விலையை, சந்தையில் பங்களிப்பவர்கள் அதாவது, வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.

இதில், அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்கள்) அவ்வப்போது அதிக எண்ணிக்கையில் வாங்குவது மற்றும் விற்பது மூலமே விலை கூடுவதும் குறைவதும் நடக்கிறது. `இதுதான் விலை' என்று யாரும் நிர்ணயிப்பதில்லை.

அருள்ராஜன்
அருள்ராஜன்

சுருக்கமாகச் சொன்னால், டிமாண்ட் அண்ட் சப்ளையைப் பொறுத்துதான் விலை ஏறுவதும் இறங்குவதும் இருக்கிறது. இதில், ஆபரேட்டர்கள் என்ற பங்குகளின் விலையைச் செயற்கையாக ஏற்றுபவர்களின் பங்களிப்பு ஒரு சிறு பகுதியாக இருக்கும். இந்த ஆபரேட்டர்கள் அனைத்து நிறுவனப் பங்குகளிலும் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.''

ஒரு கம்பெனி பங்கை விற்பதற்கு அதிக அளவில் ஆட்கள் இருந்தும், குறைந்த அளவில் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கும் நிலையில் அந்தப் பங்கின் விலை குறையத்தானே வேண்டும்... ஆனால், விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு என்ன காரணம்?

- டி.ரவீந்திரன், பழவந்தாங்கல் சென்னை 114

''இந்தக் கேள்வியில் எந்த நிறுவனம், எந்த மாதியான சூழலில் நடந்தது என்று சொல்லாமல், பொதுவாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்கு உத்தேசமாக ஒரு பதில் கூற வேண்டுமானால், விற்கும் ஆட்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், விற்கப்படும் பங்குகள் குறைவாக இருந்து, குறைவான ஆட்கள் அதிகமான பங்குகளை வாங்கினால் விலை ஏறத்தான் செய்யும்.''

Share Market Doubts
Share Market Doubts

பங்குச் சந்தை டிரேடிங் குறித்து வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பங்கு மற்றும் கமாடிட்டிச் சந்தை நிபுணரான அருள்ராஜன் அளித்த பதில்கள் அனைத்தையும் முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > பங்குச் சந்தை டிரேடிங் சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..! https://bit.ly/3hWrN1k

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு