Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரம் சந்தையில் நன்றாகவே நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. அதனால் பலர் கடினமானதாக இருக்கும் என நினைத்த நிஃப்டி 18000-யைத் தண்டிய நகர்வானது சாத்தியமானது. குறிப்பாக, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல முன்னணிப் பங்குகள் நிலையான ஏற்றத்தைக் கண்டதாலும், வங்கிப் பங்குகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாலும், கடினம் என எதிர்பார்த்த நிஃப்டி, மீண்டும் 18000-யைத் தாண்டி ஏற்றம் கண்டது. இந்த நகர்வு நிச்சய மாகச் சந்தையின் சென்டிமென்டில் உந்துதலைக் கொடுப்பதாக இருந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இந்த உந்துதலுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட் வழியாக அதிகரித்துவரும் பங்கு முதலீடு இருந்தது. டிசம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை புதிய உச்சத்தை எட்டியது. மேலும், எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர் களும் பங்குகளை விற்கும் போக்குக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். ஜனவரி மாதத்தில் இதுவரை பங்குகளைத் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இதனால் இதுவரையில் காணப் பட்ட கவலை நீங்கி சந்தை செயல்பாட்டாளர் களுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும், சந்தையில் பெரிய அளவில் இறக்கம் உண்டாவதற்கான சாத்தியங்கள் இல்லை. அதே சமயம், ஃபண்ட் மேனேஜர்கள் பட்ஜெட்டில் வர வாய்ப்புள்ள பெரிய கொள்கை முடிவுகளுக்காகக் காத்திருக் கவும் வாய்ப்புள்ளது. எனவே, வரும் வாரங் களில் சந்தை செயல்பாடானது குறிப்பிட்ட பங்குகள் சார்ந்ததாகவே இருக்கும். அதாவது, சிறப்பான நிதிநிலை முடிவுகளுடன் வரும் பங்குகள் கணிசமான ஏற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. சுமாரான நிதிநிலையுடன் வரும் பங்குகள் சில இறக்கங்களைச் சந்திக்கவும் நேரலாம். மோசமான நிதிநிலை முடிவுகளுடன் வரும் பங்குகள் பெரிய இறக்கங்களுக்கு உள்ளாகலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.டி துறையின் முன்னணி நிறுவனங்கள் நிதிநிலை முடிவுகளின் சீஸனைத் தொடங்கி யுள்ளன. குறிப்பிடத்தக்க நிதிநிலை முடிவு களுடன் வந்திருப்பதால், சந்தேகமே இல்லாமல் சந்தையின் சென்டிமென்டில் மேலும் உற்சாகத்தைச் சேர்த்துள்ளது. அதே சமயம், இவை இண்டெக்ஸில் பெரிய அளவில் பங்கு வகிப்பதால், தொடர்ந்து நகர்வு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்து முடிவுகளை எடுப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அஃபில் இந்தியா (AFFLE)

தற்போதைய விலை ரூ.1,422.00

வாங்கலாம்

செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தை தற்போது சந்தையின் பிரபலமான வார்த்தை களில் ஒன்றாக இருக்கிறது. இந்தத் துறை சார்ந்த பங்குகளில் ஒன்றாக உள்ள இந்தப் பங்கு, கடந்த பல மாதங்களாகவே நிலையான ஏற்றத்தின் போக்கில் இருந்துவருகிறது. அவ்வப் போது ஓய்வெடுத்தும், சில இறக்கங்களுடனும் இப்பங்கு நகர்ந்துவருவதால், அதன் நிலையான ஏற்றமானது அப்பங்கின் மீது எந்தவித அழுத்தத்தையும் உண்டாக்கவில்லை. எனவே, தற்போது இப்பங்கில் காணப்படும் புதிய ஏற்றத்துக்கான அறிகுறியின் பொருட்டு ரூ.1,375 ஸ்டாப்லாஸுடன் இப்பங்கை வாங்கலாம்.

சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (CHAMBLFERT)

தற்போதைய விலை ரூ.454.00

வாங்கலாம்

மத்திய பட்ஜெட் தாக்கல் நெருங்கும் நிலையில், தவறாமல் ஏற்றம் காணும் துறை களில் ஒன்று ஃபெர்டிலைசர் துறை. இந்தப் போக்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்தத் துறையில் முன்னணி பங்குகள் பட்டியலில் இந்த நிறுவனப் பங்கும் ஒன்றாக உள்ளது. தொடர்ந்து நிலையான ஏற்றத்தையும் கண்டுவருகிறது. தற்போது பட்ஜெட் காரணமாக இப்பங்கில் கூடுதல் மொமன்டம் உருவாகியுள்ளது. எனவே, இப்பங்கு 480 வரை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ரூ.435 ஸ்டாப்லாஸுடன் இப்பங்கை வாங்கலாம்.

சுவென் பார்மா (SUVENPHAR)

தற்போதைய விலை ரூ.530.00

வாங்கலாம்

பார்மா துறை பங்குகள் சமீபகாலமாக டிமான்ட் இல்லாமல் இருந்துவருகின்றன. ஆனாலும், அவற்றில் பெரும் பாலானவை இறக்கங்களைச் சந்திக்காமல் கன்சாலிடேஷன் போக்கில்தான் காணப்படு கின்றன. அவற்றில் ஒன்றாக இருக்கும் இந்த நிறுவனப் பங்கு, கடந்த ஆண்டில் கண்ட ஏற்றத் திலிருந்து மிகக் குறைவான இறக்கத்துக்குள்ளான நிலையில், தற்போது மீண்டும் மேல்நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளுடன் உள்ளது. எனவே, தற்போதைய விலையில் இப்பங்கை வாங்க லாம். ரூ.575 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.520-க்குக் கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்