Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் சந்தையின் வர்த்தகம் முதலீட்டாளர் களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. காரணம், ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாகி சந்தையை பாதிக்கும் முக்கியமான காரணியாக மாறியது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

செவ்வாய் அன்று வர்த்தகத்தின் போது போர் குறித்த செய்திகள் வந்ததும் வர்த்தகத்தில் பாதிப்பை உண்டாக்கியது. பொதுவாக, போர் குறித்த செய்திகள் இரவில் தான் வரும். எனவே, போதுமான இடைவெளி இருப்பதால், சந்தை தனது நகர்வுகளை அதன் பிறகே தீர்மானிக்கும்.

ஆனால், செவ்வாய் அன்று வர்த்தக முடிவில் கடுமையாக வீழ்ச்சி கண்டது. முந்தைய நாள் சற்று இறக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்த சந்தை, அன்றைய தினத்தில் கண்ட வீழ்ச்சியால் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் விளைவாக, லாபம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் தங்களுடைய பொசிஷன்களை விற்று வெளியேற ஆரம்பித்தனர்.

அதிர்ஷ்டவசமாக அடுத்த தினம் சர்வதேச சந்தைகள் அனைத்தும் மீண்டு வந்துவிட்டன. இந்தியச் சந்தையிலும் அதன் எதிரொலி காணப்பட்டதால், வர்த்தகம் ஓரளவுக்கு ஏற்றத்தில் நிறைவடைந்தது.

கடந்த வார நான்கு வர்த்தக நாள்களில் எந்தவித பேட்டர்னும் உருவாகவில்லை. மேலும், முந்தைய வார புதன்கிழமை காணப்பட்ட இறக்க நிலையின் இடைவெளியை நிரப்ப வேண்டிய நிலையில்தான் இன்னமும் சந்தை இருக்கிறது. எனவே, மீட்சிக்கான முயற்சியில் சந்திக்க வேண்டிய முதல் சவால் இது.

எஃப்.ஐ.ஐ விற்பனை சிறுஇடவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி குழும நிறுவன இணைப்பு செய்தியால் உருவான ஏற்றமானது, நிஃப்டி-யையும் மேல் நோக்கி நகர்த்தியது. ஆனால், அது விரைவிலேயே முடிவுக்கு வந்து எதிர்திசையில் திரும்பி ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டதால், கடந்த வார வர்த்தகத்தில் மேலும் அழுத்தத்தை உண்டாக்கியது. இண்டெக்ஸில் இவை அதிக பங்களிப்பைக் கொண்டிருப்பதால், அவற்றின் இறக்கத்துக்கும் காரணமாகின.

இதே நிலைதான் ஐ.டி துறை முன்னணி பங்குகளிலும் காணப்பட்டது. காலாண்டு முடிவுகளும் அதைத் தொடர்ந்து நகர்வுகளும் எதிர்பார்த்தபடி இல்லாததால், சந்தையின் இறக்கத்துக்கு இவையும் காரணமாகின. ரிலையன்ஸ், ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகளின் நகர்வுகள் சந்தையைப் பாதுகாத்தன. இல்லையெனில், கடந்த வாரத்தில் சந்தை இன்னும் மோசமான சரிவைச் சந்தித்திருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இனிவரும் வாரத்தில் வரக்கூடிய நிறுவன காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், விலை நகர்வுகள் இறக்கத்தின் போக்கில் தொடர்வது நிறுத்தப்படலாம். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் விடுமுறை நாள்கள் காரணமாக வர்த்தக நாள்கள் குறைவாகக் காணப்பட்டதால், வழக்கமான சந்தையின் நகர்வு தாமதமானது. ஆனால், வரும் வாரத்தில் சந்தையின் செயல்பாடு நிஃப்டியின் நகர்வைப் பக்கவாட்டில் கொண்டுசெல்வதாக இருக்கலாம்.

தற்போது நிஃப்டி தனது சப்போர்ட் நிலையில் சற்று தள்ளாட்டம் இருந்தாலும், 17000 என்ற நிலையில், அதைத் தக்கவைத்துள்ளது. ஏனெனில் போர், பொருளாதாரம், பணவீக்கம், வளர்ச்சி குறித்து எதிர்மறையான செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும், கரடியின் ஆதிக்கம் உள்நாட்டு முதலீட்டாளர்களைப் பங்குகளை விற்பவர்களாக மாற்ற முடியவில்லை. அந்த வகையில் கரடியின் ஆதிக்கம் இல்லாதது சந்தைக்குப் பாசிட்டிவான விஷயமாக உள்ளது.

எனவே, சந்தையின் நகர்வானது 16800 - 17000 என்ற வரம்பில் இறக்கங்களில் சப்போர்ட் நிலையாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும். ஏற்றத்தின் போக்கில் 17500 - 17700 என்ற வரம்பானது தற்போதைய ரெசிஸ்டன்ஸ் நிலையாக இருக்கிறது. குறிப்பாக, மிட்கேப் பிரிவு சிறப்பான நகர்வுகளைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேக்ஸ் ஹெல்த்கேர் (MAXHEALTH)

தற்போதைய விலை ரூ.420.70

வாங்கலாம்

மருத்துவமனைப் பிரிவில் தொடர்ந்து நிலையான ஏற்றத்தின் போக்கில் இருந்துவரும் பங்குகளில் ஒன்று, மேக்ஸ் ஹெல்த்கேர். இந்தப் பங்கில் 2021 டிசம்பரிலிருந்து 2022 மார்ச் வரை காணப்பட்ட இறக்கம் நிறைவடைந்திருக்கிறது.

தற்போது நல்ல சப்போர்ட் நிலையுடன் மீண்டும் நல்ல டிமாண்டில் இருக்கிறது. நல்ல வால்யூம் மற்றும் சிறப்பான மொமன்டமும் இதில் காணப் படுவதால், வலுவான ஏற்றத்தின் போக்கு உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே, ரூ.390 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். இலக்கு விலை ரூ.485 வரை உயர வாய்ப்புள்ளது.

குஜராத் அல்கலிஸ் (GUJAL KALI)

தற்போதைய விலை ரூ.974.00

வாங்கலாம்

வலுவான ஏற்றத்தின் போக்கைக் கொண்டிருக்கும் இந்தப் பங்கில் காணப்பட்ட நீண்டகால கன்சாலிடேஷனுக் குப் பிறகு, பிரேக்அவுட்டாகி ஏற்றத்தின் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் காணப்பட்ட கன்சாலிடேஷன் கொடி போன்ற பேட்டர்னை உருவாக்கிய நிலை யில், இந்தப் பங்கின் விலையை ஏற்றத்தில் நகர்த்திக்கொண் டிருக்கிறது.

இந்தப் போக்கு மேலும் தொடரும் என்பதால், ரூ.1,060 இலக்கு விலையுடன் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.920-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர் அண்ட் கெமிக்கல்ஸ் (GSFC)

தற்போதைய விலை ரூ.176.00

வாங்கலாம்

ஃபெர்டிலைசர் பங்குகள் சந்தையில் மீண்டும் நல்ல டிமாண்டில் இருக்கிறது. இந்தப் பிரிவை சார்ந்த பங்குகளின் சார்ட்டுகளும் நன்றாகவே உள்ளன. இந்த நிறுவனம் ஃபெர்டிலைசர் மட்டுமல்லாமல், கேப்ரோலேக்டம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்தப் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது, தற்போதைய விலையிலிருந்து புதிய ஏற்றத்தின் போக்கை முன்னெடுக்கும் மொமன்டத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

குறுகிய காலத்தில் ரூ.208 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.162-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism